இது 'அங்க' இருக்க வேண்டியது... எப்படி 'சாக்கு மூடையில' வந்துச்சு...? 'இது யாரோட வேலைன்னு கண்டு பிடிச்சாகணும்...' - போலீசார் தீவிர விசாரணை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேனியில் ஒரு கோவில் அருகே இருக்கும் சாக்கு மூட்டையில் சூலம் இருப்பதை பார்த்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம், சிவாஜி நகர் முதல் தெருவில் எல்லைகாத்த ரணகாளியம்மன் கோவில் உள்ளது. நேற்று (22-06-2021) அதிகாலையில், கோவிலின் வாசலில் ஒரு சாக்கு மூட்டை கிடந்தது.
கோவிலுக்கு வந்த பக்தர்கள் சாக்கு மூட்டையை பார்த்து என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்துத்துள்ளனர். அப்போது, அந்த மூட்டையை திறந்து பார்த்த போது அதற்குள் ஒரு சூலாயுதத்தின் தலைப்பகுதி மட்டும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
அதோடு இந்த சூலம் எல்லைகாத்த ரணகாளியம்மன் கோவிலுக்கு சொந்தமானது இல்லை என உறுதிப்படுத்தி கொண்டு, காவல் நிலையித்திற்கும் புகார் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த சூலத்தை கைப்பற்றியுள்ளனர். அதனை பரிசோதித்ததில் சூலம் 5 கிலோ 800 கிராம் எடை அளவும், பித்தளை என்று தெரியவந்தது. மேலும், அந்த சூலாயுதம் . சூலாயுதம் அங்கு எப்படி வந்தது? யார் கொண்டு வைத்தார்கள்? என்ற விசாரணையும் நடந்து வருகிறது.
அதோடு, இந்த சூலத்தை ஏதேனும் கோவிலில் இருந்து சூலாயுதத்தை திருடிய மர்ம நபர்கள், சம்பவ இடத்தில் போட்டு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.