ரகசியமாக எடுத்த ‘ஆபாச’ வீடியோ.. கல்யாணம் ஆன மாதிரி ‘எடிட்’ செய்த போட்டோ.. இளம்பெண்ணின் புகாரில் சிக்கிய PT வாத்தியார்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆபாசமாக படம் எடுத்து இளம் பெண்ணை மிரட்டிய வழக்கில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கதிர் நரசிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் அருள்குமரன் (வயது 39). இவர் கன்னியப்பபிள்ளைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது வீட்டுக்கு அருகில் விவேகானந்தன் என்பவர் அவரது மனைவி சுமதி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். தற்போது இவர்கள் கொடைக்கானல் அருகே பண்ணைக்காட்டில் வசித்து வருகின்றனர். இந்த இரு குடும்பத்துக்கும் நீண்ட வருட பழக்கம் என்பதால், அடிக்கடி அவர்கள் சந்தித்துப் பேசி வந்துள்ளனர்.
இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுமதி தனது 27 வயது மகளுடன் அருள்குமரனின் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது சுமதியின் மகள் பாத்ரூமில் குளிக்கும் போதும் அருள்குமரன் பலமுறை ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். மேலும் சுமதியின் மகளை திருமணம் முடித்தது போல புகைப்படம் ஒன்றையும் தயார் செய்துள்ளார்.
இதனை அடுத்து சுமதியையும் அவரது மகளையும் செல்போனில் மன ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் நொந்துபோன சுமதி, ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் போலீசார் அருள்குமரனை கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த அருள்குமரனின் தாய் சரோஜா, தந்தை முருகேசன், தங்கை மீனா ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
