இவரு தான்.. 'ஒரு லக்கனத்தில் 9 கிரகங்கள் உச்சம் பெற்ற ஒருவன்'.. சாவை சந்தித்து தப்பிய இளைஞர்.. பதைபதைக்கும் வீடியோ
முகப்பு > செய்திகள் > தமிழகம்மங்களூருவில் பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால் இளைஞர் ஒருவர் மரணத்தின் விழிம்புநிலை வரை சென்று அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகளவில் சாலை விபத்துகளில் அதிக பேர் உயிரிழக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 லட்சத்துக்கும் அதிகமான சாலை விபத்துகள் நடைபெறுவதாக மத்திய அரசின் தரவுகள் கூறுகின்றன. மனித உயிர்கள் என்பது விலைமதிப்பற்றவை. ஒருவர் மரணத்தின் துயரம் அவரது அன்புக்குரிய, நெருங்கிய உறவுகளுக்கு மட்டுமே புரியும்.
கொரோனா போன்ற பல்வேறு கொள்ளை நோய்கள் மனித உயிர்களை பறித்து வருகின்றன. இவை இயற்கையின் விதி என்று கூறி தப்பித்து விடலாம். ஆனால், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை விதி என்று கூறி தப்பித்து விட முடியாது. விதிகளை மீறி நமக்கு நாமே செய்துகொள்ளும் செய்வினை தான் விபத்து. முறையான விதிகளை பின்பற்றினால் சாலை விபத்துக்களுக்கு இங்கு இடமே இல்லை.
80 வயதில் தந்தைக்கு வந்த கல்யாண ஆசை.. கடுப்பான மகன் - சோகத்தில் முடிந்த விபரீத சம்பவம்..!
ஆனால் இது தொடர்பாக நாம் அலட்சியமாக இருப்பதால்தான் அதிக மரணங்களை சந்தித்து வருகிறோம். சாலையில் செல்வோர் சரியாக சென்றாலும், நம் எதிரில் வருபவர்கள் எமனாக மாறினாலும் ஆச்சர்யம் இல்லை. சமூகவளைதலங்களில் சாலை விபத்து தொடர்பான வீடியோக்களை கண்டு அச்சம் கொள்கிறோம். மனிதன் நோய் வந்து இறப்பதை விட விபத்தால் இறக்கும் மரணம் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.
நம் கண் முன்னே நடக்கும் விபத்தில்ஒருவர் உயிர் தப்பித்தால் ஏதோ புண்ணியம் செய்துள்ளார் என்றே நினைப்போம். சாலை விபத்துகளை தடுக்க ஒரே வழி நாம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். ஆனால் அதையும் மீறி சில விபத்துகள் நிகழத்தான் செய்கின்றன. இருப்பினும் ஒருவரின் கவனக்குறைவு பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பாக அமைந்துவிடும். படங்களில் காட்டப்படும் விபத்து காட்சிகளை விட இது மிகவும் கொடுமையானது. அதேபோன்று மங்களூருவில் தனியார் பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவால் மூன்று இளைஞர்கள் அதிர்ஷ்வசமாக உயிர் தப்பிய காட்சி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது. இந்த சம்பவம் வீட்டின் வாசலில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
நடுரோட்டில் உதட்டோடு உதடு வைத்து...70 வயசு தாத்தா செய்த அத்துமீறல்!
இந்த வீடியோவில் ஒரு பேருந்து வளைவான சாலையின் நடுவே யூடர்ன் அடிக்கிறது. அப்போது அதிவேகத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் பேருந்தை விட்டு வளைத்து செல்கிறார். வளைவு என்பதால் பேருந்து குறித்து அந்த இளைஞருக்கு தெரியவில்லை. பேருந்தை அருகில் பார்த்ததும் அவரால் பிரேக்கும் அடிக்க முடியவில்லை.
அதனால் பைக் போகும் திசையில் அவரும் போகிறார். வீட்டு சுவருக்கும் மரத்துக்கும் நடுவே புகுந்து சென்ற இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Viral video of a young man who was speeding on a scooter and miraculously avoided colliding with a bus that was taking a U-turn near Elyarpadavu, Mangalore. 🚌💨🛵
The scooter then hits the door of the fish processing unit and passed in between a shop and a tree. 😱 pic.twitter.com/c4vAvbbikj
— Mangalore City (@MangaloreCity) January 11, 2022