இன்ஸ்டா, பேஸ்புக்ல 'ஃபோட்டோ' போடுற பொண்ணுங்க தான் டார்கெட்...! - 'போலி விளம்பரம்' செய்து இளம்பெண்களை மோசடி செய்த நபர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என்று ஆசைவார்த்தை கூறி நம்ப வைத்து இளம்பெண்களை தவறான காரியத்திற்கு அழைத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கொளத்தூர் திருப்பதி நகரில் வசித்து வரும் 50 வயது நபர் ஒருவர், கொளத்தூர் காவல் நிலையத்தால் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், தனது 21 வயது மகள் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார் என்றும், அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, தொடர்ந்து என் மகளை வாட்ஸ்அப் காலில் அழைத்து, பாலியல் தொல்லை கொடுத்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.
புகாரின்பேரில், கொளத்தூர் உதவி கமிஷனர் தலைமையில் காவல்துறையினர், அந்த நபரின் செல்போன் நம்பரை, சைபர் கிரைம் போலீசார் உதவிக்கொண்டு தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
ஆனால், அவர் வாட்ஸ்அப் காலில் மட்டும் தொடர்ந்து பேசி வந்ததால், அந்த நபர் எங்கு உள்ளார் என்பதை கண்டறிய சிரமப்பட்டனர்.
இந்த நிலையில், தேடி வந்த அந்த நபர் பெரும்பாக்கத்தில் இருப்பதாக செல்போன் சிக்னல் மூலம் கண்டுபிடிக்கப் பட்டது. தாமதிக்காமல் அங்கு விரைந்த போலீசார், அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
தீவிர விசாரணையில் அந்த நபர், திருப்பூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 26) என்பதும், பெரும்பாக்கத்தில் தன்னுடைய நண்பர்களுடன் வாடகை வீட்டில் தங்கி இருந்ததும் தெரியவந்தது.
இவர், மாடலிங் மற்றும் சினிமா துறையில் வாய்ப்பு தேடும் பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக சமூக வலைதளத்தில் போலி விளம்பரம் செய்துள்ளார்.
இதனை நம்பி, இணைய விளம்பரத்தில் உள்ள எண்ணில் இளம்பெண்கள் தொடர்பு கொண்டபோது, அவர்களிடம் பெண் குரலில் பேசி, அவர்களின் புகைப்படங்களை அனுப்புமாறு கூறியுள்ளார். பின்னர், மீண்டும் அந்த பெண்களை தொடர்பு கொண்டு, செக்சியான புகைப்படங்களை அனுப்புமாறு கூறியுள்ளார்.
ஒரு பெண் தானே கேட்கிறார் என்று, மாடலிங் துறையில் உள்ள பெண்கள் அதை நம்பி தங்களது அரை நிர்வாண படம் மற்றும் செக்ஸியான புகைப்படங்களை அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர், ரஞ்சித் அந்த பெண்களை வேறொரு எண்ணில் இருந்து
தொடர்புகொண்டு, உங்களது அரை நிர்வாண படம் என்னிடம் உள்ளது. நான் சொல்வதை கேட்காமல் போனால், அவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன், என மிரட்டி பாலியல் ரீதியிலான தொந்தரவு கொடுத்துள்ளார். இப்படியாக சில பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதன்படி, கொளத்தூரை சேர்ந்த பெண்ணையும் அழைத்துள்ளார். ஆனால், இவர் மோசடி நபர் என்பதை உணர்ந்த அவர், ரஞ்சித்தின் போனை எடுக்காமல் இருந்துள்ளார்.
இதனால் கோவமான ரஞ்சித் இளம்பெண் அனுப்பிய புகைப்படங்களை நிர்வாணமாக மார்ஃபிங் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இதங்காரணமாக, அதிர்ச்சியடைந்த அந்த பெண் இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். மேலும், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக்-இல் போட்டோ போடும் பெண்களை தொடர்ச்சியாக நோட்டம் விட்டு அவர்களை ரஞ்சித் இதுபோன்று ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் பயன்படுத்திய மொபைல் போனை ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
