மாமியாருடன் பிரச்சனை ... கொடுத்த 'வரதட்சணை'லாம் கட்டுப்படியாகாது... கணவன் குடும்பம் சேர்ந்து செய்த கொடுமை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Issac | Jan 14, 2020 01:13 PM
தருமபுரி மாவட்டம் மாரியம்பட்டி அருகே, இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக, முதல் மனைவி அளித்த புகாரின்படி, அரசு பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட எட்டு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் மாரியம்பட்டியை சேர்ந்தவர் சத்யா(28). இவர் சித்தேரியில் உள்ள அரசு உண்டு உறைவிடப்பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் அதியமான்(32) என்பவருக்கும், கடந்த,2017-ம் ஆண்டு திருமணமானது. அப்போது 32 பவுன் நகை, 1 லட்சம் ரூபாய், கட்டில், பீரோ உள்ளிட்ட வீட்டு சாமான்கள் மற்றும் கார் ஆகியவை சத்யாவிற்கு வரதட்சணையாக வழங்கப்பட்டன.
ஆறு மாதங்கள் நல்ல முறையில் குடும்பம் நடத்திய நிலையில், சத்யாவுக்கும், அவரது மாமியார் குமாரி(45) என்பவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது.இதையடுத்து, மொரப்பூரில் வாடகை வீட்டில் சத்யாவும், அதியமானும் தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் மூன்று லட்சம் ரூபாய் கேட்டு, அதியமான், குமாரி, அவரது மகன் அதிபிரசாத்(29), உறவினர் தொப்பையன(48) ஆகியோர் சத்யாவை அடித்து கொடுமை படுத்தியதுடன் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும் ஜனவரி ஆறாம் தேதி அதியமானுக்கு பந்தாரஹள்ளியை சேர்ந்த பவித்ரா(22) என்ற பெண்ணுடன் இரண்டாவது திருமணம் நடந்துள்ளது. இது குறித்து அரூர் அனைத்து மகளிர் போலீசிடம் சத்யா அளித்த புகாரின்பேரில், அதியமான், குமாரி, அதிபிரசாத், தொப்பையன், பவித்ரா, அவரது தந்தை செந்தில்(52), தாய் சாந்தி(49), அரசு(26) ஆகிய எட்டு பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.