legend updated recent

'ரஜினிகாந்த், நயன்தாரா' உட்பட... 'ஒரு கோடிக்கும் மேல் மக்கள்'...'விடைபெறும் அத்திவரதர்'...பக்தர்கள் வெள்ளம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Aug 16, 2019 01:47 PM

காஞ்சிபுரத்தில் 46 நாட்களாக நடைபெற்ற அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெரும் நிலையில், மக்கள் வெள்ளத்தில் காஞ்சிபுரம் தத்தளிக்கிறது.

The 46 day long Athivaradar Darshan festival ends today

108 திவ்யதேசங்களில் ஒன்றான காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசித்து வருகின்றனர். xஅத்திவரதர் தரிசனத்தையொட்டி காஞ்சீபுரம் நகரமே பக்தர்கள் கூட்டத்தால் திக்குமுக்காடியது. விடுதிகள் நிரம்பி காணப்பட்டது.

இதனிடையே கடந்த 46 நாட்களாக நடைபெற்று வந்த அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இறுதி நாள் என்பதால் 5 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விஐபி தரிசனம் நேற்று 2 மணியுடன் நிறைவுபெற்றது. இன்று அத்திவரதரை முக்கிய நபர்களுக்கான வரிசையில் நின்றோ, டோனர் பாஸ் மூலமாகவோ தரிசிக்க முடியாது. பொது தரிசன வரிசையில் நின்று மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில் இன்று மாலைக்குள் காஞ்சிபுரம் நகருக்குள் வரும் அனைவரும் அத்திவரதரை தரிசித்த பிறகே தரிசனம் நிறைவடையும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து 17ஆம் தேதி அதிகாலையில் தரிசனம் நிறுத்தப்பட்டு, கோவில் வளாகத்தில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டு, ஆகம விதிப்படி அனந்தசரஸ் குளத்திற்குள் அத்திவரதரை வைப்பதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா ஆகியோர் அத்திவரதரை தரிசித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #ATHIVARADAR #ATHIVARADAR DARSHAN #FESTIVAL #KANCHIPURAM