நைட்டியில் வந்த திருடர்.. வீட்டின் பூட்டை உடைக்க முடியாததால்.. ஆத்திரத்தில் செஞ்ச அதிர்ச்சி காரியம்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Jan 06, 2023 05:54 PM

அவ்வவ்போது இணையத்தில் நாம் வலம் வரும் போது நம்மைச் சுற்றி நடக்கும் நிறைய விஷயங்கள் குறித்து நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

Thanjavur thief in nighty cctv video viral in internet

Also Read | "கர்ப்பம் இல்ல".. ஆனாலும் பிரசவ வலியை அனுபவித்த இளம்பெண்.. திகைக்க வைத்த காரணம்!!

இதே போல, நாளுக்கு நாள் நிறைய வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரல் ஆவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இதில் வகை வகையாக வீடியோக்கள் அல்லது செய்திகள் வலம் வரும் சூழலில், சில திருட்டு சம்பவங்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு பலர் மத்தியில் பரபரப்பை உண்டு பண்ணும்.

அந்த வகையில், ஒரு வீடியோவும் அதன் பின்னால் உள்ள காரணமும் தான் தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிக வைரலாகி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டம், நாஞ்சிக் கோட்டை பகுதி ரியாஸ் நகரை சேர்ந்தவர் சின்னத்துரை. இவர் குடும்பத்துடன் வசித்து வரும் நிலையில், சமீபத்தில் வேலையை முடித்து விட்டு திரும்பிய அவர், தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மாடியில் தூங்க சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், வழக்கம் போல காலை  எழுந்து வீட்டு வாசலை,திறந்து பார்த்த போது கடும் அதிர்ச்சி ஒன்று அவருக்கு காத்திருந்துள்ளது.

அதவாது, அவர் வீட்டின் முன்பு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா சேதமடைந்து இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனையடுத்து, உடனடியாக கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்துள்ளார் சின்னத்துரை.

Thanjavur thief in nighty cctv video viral in internet

அதில் இருந்த காட்சிகள் சின்னத் துரையை இன்னும் திடுக்கிட வைத்திருந்தது. அதில் நைட்டி போட்டு கொண்டு ஒரு மர்ம நபரும், அரைக்கால் டவுசர் போட்டிருந்த இன்னொரு நபரும் என இரண்டு பேர் சின்னத்துரை வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளது பதிவாகி உள்ளது. ஆனால், வீட்டின் கதவை கொள்ளையர்களால் உடைக்க முடியவில்லை என்பதும் அதில் தெரிகிறது.

இதனால் ஆத்திரத்தில் இருந்த திருடர்கள், அங்கே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை உடைத்து சென்றுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து சின்னத்துரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதே போல, அப்பகுதியில் சமீப காலமாக சில திருட்டு சம்பவங்களும் அரங்கேறி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

நைட்டி அணிந்து கொண்டு கொள்ளையர்கள் தஞ்சாவூர் பகுதியில் அரங்கேறி வருவது அப்பகுதி மக்களை பீதியில் ஆழ்த்தி உள்ளது.

Also Read | வளர்ந்துகொண்டே இருக்கும் அதிசய ஆசாமி... உலகின் உயரமான மனிதரா? வைரல் பின்னணி..

Tags : #THANJAVUR #THIEF #NIGHTY #CCTV #THANJAVUR THIEF IN NIGHTY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Thanjavur thief in nighty cctv video viral in internet | Tamil Nadu News.