வளர்ந்துகொண்டே இருக்கும் அதிசய ஆசாமி... உலகின் உயரமான மனிதரா? வைரல் பின்னணி..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Ajith Kumar V | Jan 06, 2023 12:38 PM

அடிக்கடி உலகில் உயரமாக இருக்கும் நபர்கள் குறித்து நிறைய தகவல்கள் வெளி வருவதை நாம் பார்த்திருப்போம், புதிது புதிதாக உயரமாக இருக்கும் மனிதர் பெயர் மாறிக் கொண்டே இருக்கும் சூழலில், தற்போது உயரமான ஒரு மனிதர் குறித்த செய்தி, இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

Ghana man tall guy grow frequently by medical condition

Also Read | "இப்படியா லவ் Propose பண்றது?".. இளைஞரின் செயலால் அதிர்ந்த மைதானம்.. கடைசியில் அவரே வெச்ச ட்விஸ்ட்!!

மேற்கு ஆப்பிரிக்கா நாடான கானாவின் குக்கிராமம் ஒன்றில் பிறந்தவர் சுலைமனா அப்துல் சமத். இவர் தற்போதைய உலக சாதனையாக துருக்கியின் சுல்தான் கோசனை விட ஓரடி உயரம் குறைவானவர். அதாவது, சுமார் 7 அடி 4 இன்ச் உயரத்துடன் சுலைமனா விளங்குகிறார். இவரை விட உலகில் உயரமான நபர்கள் இனி வந்தாலும் அவரையும் விரைவில் சுலைமனா முந்தி விடுவார். அதற்கான காரணம் தான் தற்போது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Ghana man tall guy grow frequently by medical condition

வடக்கு கானாவின் குக்கிராமத்தை சேர்ந்த சுலைமனா, பள்ளிப் படிப்பை முடித்ததுமே அருகிலுள்ள நகரங்களுக்கு பிழைப்பு தேடி சென்றதாக தகவல்கள் கூறுகிறது. வாகன ஓட்டுநராக வேண்டும் என்பது சிறு வயதில் சுலைமனாவுக்கு கனவாக இருந்துள்ளது. ஆனால், வாகன ஓட்டுநராக அவருக்கு ஏற்ப வாகனங்கள் இல்லை என்பதையும் விரைவில் சுலைமான் உணர்ந்துள்ளார். இதற்கு காரணம், திடீரென அதீத உயரத்தில் அவர் வளர ஆரம்பித்துள்ளது தான்.

Ghana man tall guy grow frequently by medical condition

இது தொடர்பாக சுலைமனாபை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மரபு தொடர்பான கோளாறு என்றும், மூளை அறுவை சிகிச்சை செய்தால் பலன் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த அளவுக்கு சுலைமானிடம் வசதி இல்லை என்பதால் தனது உயரத்தையே அவர் எளிதாக எடுத்துக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றது. தான் இப்படி இருப்பதற்காக அல்லாவால் படைக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன் என்றும் சுலைமனா குறிப்பிட்டுள்ளார். முன்னதாக, சுலைமனா உயரத்தை பரிசோதித்த போது அவர் 9.6 அடி உயரம் வரை வளர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

Ghana man tall guy grow frequently by medical condition

ஆனால், அது தவறுதலாக அளவு எடுக்கப்பட்டது என்பது தெரிய வந்த நிலையில், அவரது உயரம் 7. 4 அடி என்பதும் உறுதியானது. இதுகுறித்து பேசும் சுலைமனா, ஒரு நாள் அந்த உயரத்தை கூட நான் அடையலாம் என்றும், நான்கு, ஐந்து மாத இடைவெளியில் தான் வளர்ந்து கொண்டே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்கள் கழித்து என்னை நீங்கள் பார்த்தால் நான் உயரம் கூடி கொண்டே இருப்பதை உணர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூரில் செல்போன் குறித்த கடை ஒன்றை வைத்து தனது வயிற்று பிழைப்பை நடத்தி வரும் சுலைமனாவுக்கு அவரது உயரமே விளம்பரமாகவும் இருந்துள்ளது. தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் சுலைமனா அப்துல் சமத் என்ற நபர் குறித்த செய்தி, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Also Read | "தனிமையில் செல்லும் ஜோடிகள் தான் இலக்கு".. பெண்களை ரகசியமா கண்காணித்து வந்த நபர்... திடுக்கிடும் பின்னணி!!

Tags : #TALLEST MAN #GHANA MAN #GROW #MEDICAL CONDITION

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Ghana man tall guy grow frequently by medical condition | World News.