"தமிழ்நாடு வாழ்க".. மக்கள் நீதி மய்யம் கட்சி நிறுவனர் கமல்ஹாசன் 5 மொழிகளில் ட்வீட்! TRENDING
முகப்பு > செய்திகள் > தமிழகம்கமல்ஹாசன் நடிகராக மட்டுமல்லாது 'மக்கள் நீதி மய்யம்' என்ற தேர்தல் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவராகவும் உள்ளார்.
![Mnm Kamal Haasan Tweet with Tamilnadu hashtag Mnm Kamal Haasan Tweet with Tamilnadu hashtag](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/mnm-kamal-haasan-tweet-with-tamilnadu-hashtag.jpeg)
Also Read | வளர்ந்துகொண்டே இருக்கும் அதிசய ஆசாமி... உலகின் உயரமான மனிதரா? வைரல் பின்னணி..
மேலும் சினிமா சம்பந்தப்பட்ட பல நிகழ்வுகளிலும் கமல்ஹாசன் அவ்வப்போது பங்கெடுத்தும் வருகிறார்.
கலாச்சாரம், காந்தியம், சினிமா, அரசியல் சம்பந்தப்பட்ட களங்களில் நடக்கும் மாநாடு கருத்தரங்குகளில் அவ்வப்போது கமல்ஹாசன் கலந்து கொண்டு வருகிறார்.
மகாத்மா காந்தியாரின் மிகத்தீவிர பின்பற்றாளரான உலகநாயகன் கமல்ஹாசன், கதர் ஆடைகளை அணிந்து கதர் ஆடை குறித்த விழிப்புணர்வை சமூகத்தில் ஏற்படுத்தி வருபவர்.
தமிழ்நாடு
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை கிண்டியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை சந்தித்து பேசினார். இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, "இந்தியா என்பது ஒரே நாடு. தமிழ்நாடு என்று சொல்வதை விட 'தமிழகம்' என்று சொல்வதே சரியாக இருக்கும்" என பேசினார்.
இச்சூழலில் 'தமிழ்நாடு' என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் "#தமிழ்நாடு வாழ்க #തമിഴ്നാട് വിജയിക്കട്ടെ #తమిళనాడు వర్ధిల్లాలి #ತಮಿಳುನಾಡಿಗೆ ಜಯವಾಗಲಿ #तमिलनाडु जयहो । Long live #TamilNadu Long live #India" என ட்வீட் செய்துள்ளார்.
Also Read | "கர்ப்பம் இல்ல".. ஆனாலும் பிரசவ வலியை அனுபவித்த இளம்பெண்.. திகைக்க வைத்த காரணம்!!
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)