பூட்டிய காரை திறந்த பார்த்து உறைந்துபோன ஓனர்.! .. தஞ்சையில் அதிர்ச்சி சம்பவம்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் இருந்த கார் நிறுத்தும் இடத்தில் கார் ஒன்று பூட்டிய நிலையில் இருந்தது. அந்த காரை திறந்து பார்த்த ஓனருக்கு உறைய வைக்கும் அதிர்ச்சி காத்திருந்ததுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அக்வா டெக் கம்பெனியில் உதவி மேலாளராக பணியாற்றி வருபவர் அருண்குமார். மதுரை உசிலம்பட்டி, செக்கானூரணியை சேர்ந்த இவர், கடந்த 5ம் தேதி தனது ஆல்டோ காரை எடுத்துக்கொண்டு தஞ்சை புதிய பேருந்து நிலையம் சென்றுள்ளார். அங்கு சென்றவர், அங்கிருந்த கார் நிறுத்தும் இடத்தில் காடை நிறுத்திவிட்டு டோக்கன் பெற்றுக் கொண்டுள்ளார்.
பின்னர் அங்கிருந்த அலுவலகம் பணி காரணமாக கோவைக்கு சென்றுவிட்டார். பின்னர் கோவையில் இருந்து மீண்டும் தஞ்சைக்கு திரும்பிய அருண்குமார், தான் நிறுத்தியிருந்த கார் நிறுத்தத்தில் இருந்த கார் கதவை திறந்து பார்த்துள்ளார். அப்போது அந்த காரின் ஓட்டுநர் இருக்கையில் அழுகிய நிலையில் சுமார் 24 வயதுள்ள அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரின் பிரேதம், அரை நிர்வாண கோலத்தில் இருந்துள்ளதை பார்த்து அதிர்ந்து போயுள்ளார்.
பின்னர் தடயவியல் நிபுணர்கள் மற்றும் காவல்துறையினரிடத்தில் தகவல் கூற, பின்னர் வந்த போலீஸார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் காருக்கு அருகில் தரையில் கிடந்த ஒரு பிளாஸ்டிக் பையை கவனித்துள்ளனர். அதை ஆராய்ந்தபோது அதில் சட்டை, வேஷ்டி மற்றும் செல்போன் இருக்க, உடனடியாக அந்த செல்போனில் கடைசியில் டயல் ஆகி இருந்த செல்போன் எண்ணை காவல்துறையினர் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போதுதான் இறந்து கிடந்த் அந்த நபர் மணிகண்டன் என்பதும், அவர் தஞ்சை மாவட்டம் பாப்பாநாடு பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
