‘மத்த கதையெல்லாம் எதுக்கு?’.. குடிமகன்களை ‘நடுங்க வைக்கும்’ டாஸ்மாக் ‘விற்பனை நேரம்’ பற்றிய முக்கிய அறிவிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் செயல்பட்டுவந்த 5,300 டாஸ்மாக் கடைகள் கொரோனா பரவலின் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25-ம் தேதி முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து மூடப்பட்டன.

ஆனால் ஊரடங்கு அமலில் இருந்தபோது, மே 7-ம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளின்படி சென்னையின் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளிலுள்ள 3,700 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. பின்னர் ஆகஸ்ட் 18-ம் தேதி முதல் சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் செயல்பட தொடங்கின.
இதனை அடுத்து சென்னையில் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் டாஸ்மாக் செயல்பட்டுவந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதுமுள்ள டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள், இன்று முதல் நண்பல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
