“அவங்க குறிவெச்சதே இதுக்குதான்!”.. ‘10,000 கணக்குகளை முடக்கிய ஹேக்கிங் மன்னர்கள்!’.. ‘ஸ்தம்பித்து நிற்கும் நாடு!’
முகப்பு > செய்திகள் > உலகம்அண்மையில் கனடாவில் நடந்த சைபர் தாக்குதல்களின் போது ஆன்லைன் அரசாங்க சேவைகளுக்கான பல்லாயிரக்கணக்கான பயனாளர்களின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து பேசிய கனடா செயலகத்தின் கருவூல வாரியம் தரப்பு, சுமார் 30 மத்திய அரசு துறைகள் மற்றும் கனடா வருவாய் முகமை கணக்குகளால் பயன்படுத்தப்படும் GCKey சேவையை குறிவைத்துதான் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
GCKey கணக்கு வைத்திருப்பவர்களில் 9,041 பேரின் பாஸ்வேர்டு மற்றும் பயனாளர்களின் பெயர்கள் கையகப்படுத்தப்பட்டு அரசாங்க சேவைகளை அணுகவும், பயன்படுத்தவும் இந்த மோசடி நடந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இதில் பாதிக்கப்பட்ட கணக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், தனியுரிமை மீறல்கள் மற்றும் தனிநபர் தரவுகள் பெறப்பட்டுள்ளனவா என்பது குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
