'அம்மாவின் (ஜெ)' பிள்ளை வேஷம் போட்டுத் 'தப்பிக்க முடியாது...' 'வாழ்த்து' சொன்ன தாய்குலமே 'தீர்ப்பு' சொல்லும்... 'கடுமையாக சாடிய கமல்ஹாசன்...'
முகப்பு > செய்திகள் > தமிழகம்அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது என்று டாஸ்மாக் விவகாரத்தில் ஆளும் அதிமுக அரசை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கடுமையாகச் சாடியுள்ளார்.
தமிழகத்தில் பொது முடக்கத்திற்கு இடையே அமல்படுத்தப்பட்ட தளர்வுகளின்படி, சென்னையைத் தவிர்த்துப் பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை என உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
இதற்கு எதிராக தமிழக அரசு செய்தமேல் முறையீட்டு வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டது. அத்துடன் கட்டுப்பாடுகளுக்கு இடைக்கால தடைவிதித்து உள்ளதாகவும் கூறியது. இதையடுத்து நாளை முதல் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில் "மதுக்கடைகளை மூடியதற்கு தமிழகமெங்குமுள்ள தாய்க்குலம் வாழ்த்துச் சொன்னது. திறந்ததற்கான தீர்ப்பை அதே தாய்க்குலம் சொல்லும், மிக விரைவில். அப்போது நீங்கள் அம்மாவின் பிள்ளை வேஷம் போட்டுத் தப்பிக்க முடியாது" எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.