'அரசு ஊழியர்களுக்கு 59 வயசுல தான் பென்ஷன்...' 'எந்தெந்த நிறுவனங்களுக்கு என அரசாணை...' தமிழக அரசு அறிவிப்பு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக அரசு பணியில் உள்ளவர்களின் ஓய்வு பெறும் வயதை 58-லிருந்து 59 வயதாக உயர்த்தி ஆணை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்கள் நீண்ட காலமாகவே தங்களது ஓய்வு பெரும் காலத்தை நீட்டிப்பு செய்யவேண்டும் என கோரிக்கைகளை வைத்திருந்தனர். இந்த இக்கட்டான காலத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்வாக அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்றுள்ளது தமிழக அரசு.
இன்று காலை தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் இன்று முக்கிய செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. அதில் தமிழக அரசின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 59ஆக உயர்த்தி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த அரசாணையானது அனைத்து தமிழக அரசு ஊழியர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சில வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸ் நிதி நெருக்கடியால் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு, ஈட்டிய விடுப்பு சம்பளம் ஆகியவற்றை ரத்து செய்திருந்தது.
