நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டம்.. தங்களது ஒருநாள் ஊதியத்தை அளிக்க முன்வந்த ஐஏஎஸ் அதிகாரிகள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Mar 10, 2023 03:32 PM

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளை தரம் உயர்த்தும் 'நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' திட்டத்திற்கு ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை அளித்திருக்கின்றனர்.

Tamilnadu IAS officers given one day salary to Namma School Foundation

                               Images are subject to © copyright to their respective owners.

Also Read | காத்துவாக்குல 2 காதல்.. ஒரே நேரத்துல 2 பெண்களை கரம் பிடித்த வாலிபர்.. மனுஷன் செஞ்ச பிளான் தான்..!

நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்

தமிழ்நாட்டில் இயங்கி வரும் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் நோக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம் தொடங்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் முக.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் தங்களது பள்ளிக்கு உதவ வேண்டும் எனவும் இது ஒரு சமுதாயக் கடமை எனவும் தெரிவித்து இருந்தார். இதன் மூலம் கிடைக்கப்பெறும் நிதி அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் அரசு பள்ளிகளுக்கும் அங்கு பயிலும் மாணவ மாணவியர்களின் வளர்ச்சிக்கும் செலவிடப்படும் என அவர் உறுதியளித்திருந்தார்.

உதவி

இந்த திட்டத்தை துவங்கி வைத்து பேசிய முதல்வர் முக.ஸ்டாலின்,"எல்லா முன்னேற்றத்தையும் அரசே முழுமையாக செய்வது இயலாத ஒன்று. இதற்கு மக்களும் கைகோர்த்து முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும். ஒவ்வொருவருடைய வாழ்விலும் வசந்தகாலம் என்பது பள்ளிக் காலம்தான். நாம் இந்தளவிற்கு உயர்வதற்கு, இந்த உயரத்தை அடைவதற்கு உதவியாக இருந்தது அந்தப் பள்ளிக் கூடம் தான்.

Tamilnadu IAS officers given one day salary to Namma School Foundation

Images are subject to © copyright to their respective owners.

அந்தப் பள்ளிக் கூடங்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டாமா? என்ற உன்னதமான நோக்கத்தோடு "நம்ம ஸ்கூல் பவுண்டேசன்" நம்ம ஊர் பள்ளி என்ற பெயரில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. பயன்பெற்றவர்கள் தங்களது நன்றியின் அடையாளத்தைத் தெரிவிக்கலாம். அதற்கான வாசற்படிதான் இந்த நம்ம ஊர் பள்ளி திட்டம்" எனத் தெரிவித்திருந்தார். இந்த திட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளில் மட்டும் 50 கோடி ரூபாய் நன்கொடையாக கிடைக்கப் பெற்றதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒருநாள் ஊதியம்

இந்த நிலையில் தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டத்திற்கு அளிக்க முன்வந்திருக்கின்றனர். அதன்படி தங்களது மார்ச் மாதத்தின் சம்பளத்தில் இருந்து ஒருநாள் ஊதியத்தை அளிக்க இருப்பதாக தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இதனை ஏற்றுக்கொண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.

Tamilnadu IAS officers given one day salary to Namma School Foundation

Images are subject to © copyright to their respective owners.

அரசு பள்ளிகளில் பயின்று தற்போது தொழிலதிபர்களாக இருக்கும் பலர் தமிழக அரசின் இந்த திட்டத்துக்கு உதவி செய்தும் வருகின்றனர். இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களது ஒருநாள் ஊதியத்தை நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டத்துக்காக அளித்திருப்பது பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

Also Read | திடீர்னு வெடிச்ச ஃப்ரிட்ஜ்.. வீட்டுக்கு சென்ற போலீஸ் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்.. பொள்ளாச்சியில் பரபரப்பு..!

Tags : #IAS OFFICERS #SALARY #NAMMA SCHOOL FOUNDATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamilnadu IAS officers given one day salary to Namma School Foundation | Tamil Nadu News.