இப்போதைக்கு 'வாய்ப்பில்ல'... 'தமிழக' முதல்வரின் அறிவிப்பால்... மகிழ்ச்சியில் ‘திக்குமுக்காடி’ போய் நிற்கும் 'கல்லூரி' மாணவர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இதனால், கடந்த ஜூன் மாதம் தமிழகத்தில் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. தொடக்கத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகளை நடத்த தமிழக அரசு மும்முரம் காட்டிய நிலையில், மாநிலத்தின் நிலையை கருத்தில் கொண்டு பின்னர் தேர்வுகளை ரத்து செய்வதாக அறிவித்தது.
இந்நிலையில், கல்லூரி மாணவர்களின் இறுதி பருவத் தேர்வை செப்டம்பர் மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என யூஜிசி சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் மாத இறுதிக்குள் கல்லூரி தேர்வுகளை தமிழகத்தில் நடத்த முடியாது என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியாலுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதில் சிக்கல் உள்ளது. மாணவர்கள் பலர் வெவ்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் உள்ளனர். அவர்கள் கல்லூரிக்கு வந்து தேர்வு எழுத முடியாத நிலையில், ஆன்லைன் தேர்வுக்கும் சாத்தியமில்லை. மேலும், தமிழகத்தில் சில கல்லூரிகள் மற்றும் அவற்றின் விடுதிகள் கொரோனா மையமாகவும் செயல்பட்டு வருகிறது. இதனால் செப்டம்பர் மாதத்திற்குள் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு சாத்தியமில்லை என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பால் கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சியில் திளைத்து போயுள்ளனர். முன்னதாக பத்தாம் வகுப்பு தேர்வை தமிழக அரசு அறிவித்த போது கல்லூரி தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என மீம்ஸ்கள் வைரலாந்து குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
