உதவி கேட்ட இளைஞர்... "என்கிட்ட சொல்லிடீங்கள்ல"... "நான் பாத்துக்குறேன்"... மாஸ் காட்டிய முதல்வர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Apr 23, 2020 01:07 PM

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் ஊரடங்கை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் தினசரி தொழிலாளர்கள் மற்றும் வேறு மாநிலங்கில் பணிபுரிந்து வருபவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

Tamilnadu CM helps after the young guy\'s request

இந்நிலையில் குஜராத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வரும் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் தமிழக முதல்வருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். அதில், 'ஐயா நான் மத்திய பாதுகாப்பு படையில் குஜராத் அகமதாபாத்தில் பணியில் உள்ளேன். எனது தாயார் 89 வயது வீட்டில் தனியாக உள்ளார். அவருக்கு உடல் நிலை சரியில்லை. எனக்கு தந்தையும் இல்லை சகோதரனும் இல்லை எனது தாயாருக்கு மருத்துவ உதவி தேவை' என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த முதல்வர், 'தங்கள் தாயாருக்கு தேவையான மருந்துகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. மேலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் காய்ச்சலோ, இருமலோ, மூச்சுத்திணறல் உள்ளிட்ட எந்த பிரச்சனைகளும் இல்லை. நலமாக உள்ளார். தாங்கள் தைரியமாக நிம்மதியுடன் இருங்கள்!' என பாதுகாப்பு படை வீரரின் தாயாருக்கு உதவி செய்த புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.

முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.