நம்ம நியாயமா 'கேள்வி' கேட்டா... 'எஜமானர்' மனசு 'கோணிடும்' பாருங்க... கமல்ஹாசனின் நேரடி 'அட்டாக்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | May 17, 2020 09:29 PM

டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசை மீண்டும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Kamalhaasan once again slams TN govt in Tasmac issue

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள நிலையில், கடந்த 7 ஆம் தேதியன்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உட்பட பலர் மதுக்கடைகளை மூட வேண்டும் என மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து மீண்டும் மேல்முறையீடு செய்த தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க உச்சநீதிமன்றத்தில் அனுமதி வாங்கியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை கமல்ஹாசன் விமர்சித்திருந்தார். இந்நிலையில், டாஸ்மாக் விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாட்டையும், மத்திய அரசின் 20 லட்சம் கோடிக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டத்தையும் கமல்ஹாசன் மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒருசேர விமர்சனம் செய்துள்ளார்.

கமல்ஹாசனின் தனது ட்விட்டர் பதிவில், '20 லட்சம் கோடி அறிவிப்பில் தமிழ்நாட்டிற்கு நேரடி பயன் எவ்வளவு? மாநிலத்திற்கு நியாயமாக வர வேண்டியதைக் கேட்டால் எங்கே எஜமானர் மனசு கோணி விடுமே என்ற பயம். ஆகவே டாஸ்மாக்கில் மக்கள் உயிரை பயணம் வைத்து பணம் பறிக்கிறது அம்மா அரசு என்ற பெயரில் இயங்கும் அடிமை அரசு' என பதிவிட்டுள்ளார்.