இத்தனை 'பிரச்சனை'லயும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு "குட் நியூஸ்" ... ஒரே மாவட்டத்தில் குணமடைந்த ''13 பேர்''... 'கரவொலி'யுடன் வழியனுப்பிய 'மருத்துவ பணியாளர்கள்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Apr 15, 2020 08:36 PM

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் நேற்று எண்ணிக்கை குறைந்து 31 மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தனர்.

13 people from Erode district recovered from Corona Virus

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 13 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மொத்தமாக 58 பேர் கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 13 பேர் குணமடைந்துள்ளனர். மீதமுள்ள 45 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், அவர்களது வீட்டில் அடுத்த 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அது மட்டுமில்லாது அந்த 14 நாட்களும் அவர்களை சுகாதாரத்துறை மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குணமடைந்து வீடு திரும்பிய 13 பேருக்கும் ஈரோடு கலெக்டர் கதிரவன் பூங்கொத்து மற்றும் பழக்கூடைகளை கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார். வீட்டிற்கு திரும்பியவர்களை மருத்துவ பணியாளர்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர்.

அதே போல சிவகங்கை மாவட்டத்தின் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆறு பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்து வீடு திரும்பியவர்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சால்வை அணிந்து அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.