'இனிமே'.. 'காஷ்மீர்ல இருக்குற ஒயிட் ஸ்கின்' பொண்ணுங்கள 'கல்யாணம் பண்லாம்'. . BJP MLA அதிரடி!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Aug 07, 2019 12:46 PM
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கதௌலி தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சிங் சைனி. காஷ்மீர் விவகாரத்தில் இவர் பேசியுள்ளது பலரிடையே பரபரப்பை கிளப்பியுள்ளது.

மத்திய பாஜக அரசால் நிறைவேற்றப்பட்ட ஆர்ட்டிக்கிள் 370 மசோதாவுக்கு பின், காஷ்மீர் விவகாரம் பெரும் பிரச்சனையாக மாறியிருக்கிற இந்த நேரத்தில் விக்ரம் சிங் சைனி பேசியுள்ள கருத்து பெருமளவில் வைரலாகி வருவதோடு, விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது. பலரிடையே இந்தக் கருத்துக்கு ஆதரவுகளும் எழுந்துள்ளன.
அதன்படி, காஷ்மீர் விவகாரம் தொடர்பான ஆர்ட்டிக்கள் 370 மற்றும் 35ஏ உள்ளிட்ட காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் சட்ட வரைவுகள் நீக்கப்பட்டுள்ளதால, கட்சியில் உள்ள முஸ்லீம் நண்பர்கள் சந்தோஷப்பட வேண்டும், என்றும் அவர்கள் இனி காஷ்மீரில் வெள்ளைத் தோலுடன் மினுக்கும் பெண்களை திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
அவர் தன் கட்சிசார்ந்த உறுப்பினர்களிடையே இவ்வாறு பேசியபோது பலத்த கைத்தட்டல்களும் எழுந்தன. இந்த வீடியோ இணையதளத்தில் பரவி வருகிறது.
Muzaffarnagar BJP MLA Vikram Saini on abrogation of Article 370.
"Muslim karyakartas sitting here should be celebrating. Marry "gori ladki" from Kashmir now" pic.twitter.com/tRhZXy8IZq
— Piyush Rai (@Benarasiyaa) August 6, 2019
