'அஞ்சு மாசமா என் பொண்ணு போராடுனா'...'உயிரிழந்த பிரபல வீரரின் மகள்'...அதிர்ச்சியில் உறைந்த வீரர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Jeno | Sep 01, 2019 11:28 AM

பார்சிலோனா கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் லுயிஸ் என்ரிகியுயின் மகளின் மரணம் கால்பந்து உலகத்தை அதிர்ச்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Lionel Messi Offer Condolences as Luis Enrique Loses Daughter to Cance

தன்னுடைய மகள் மரணமடைந்து விட்டதாக கடந்த வியாழக்கிழமை லுயிஸ் என்ரிகியு ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இது கால்பந்து உலகத்தை அதிர்ச்ச்சியில் உறைய வைத்துள்ளது. அவருடைய பதிவில் “எலும்பு புற்றுநோயுடன் 5 மாதங்கள் போராடிய எங்களுடைய 9 வயது மகள் ஸனா உயிரிழந்துவிட்டாள். ஸனாவின் இந்தப் போராட்ட காலத்தில் அவள் மீது அக்கறை எடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டிருந்தார்.

பார்சிலோனா ரியல் மாட்ரிட் அணிகள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளன. இது மிகவும் அதிர்ச்சிகரமான நிகழ்வு என தங்களது இரங்கலை தெரிவித்துள்ளது. மேலும் கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸி, டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் உள்ளிட்ட நட்சத்திர விளையாட்டு வீரர்கள் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளார்கள்.

#RIPXana ஹேஷ்டேக்கில் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். ஸனா கால்பந்து மைதானத்தில் தனது தந்தையுடன் துள்ளி விளையாடிய புகைப்படங்களை பதிவிட்டு தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.

Tags : #CANCER #BARCELONA SPAIN #XANA #FOOTBALL #LUIS ENRIQUE