'தம்பி, பைக்கை நிறுத்துங்க'... 'காவலர் கேட்ட உதவி'... 'யோவ், அவரு தான் யா மனுஷன்'... ஒரே வீடியோவில் பலரது இதயத்தை தொட்ட காவலர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 25, 2021 05:51 PM

இணையத்தில் வைரலாகும் வீடியோ ஒன்று காவலர்கள் எவ்வளவு மனித நேயத்துடன் செயல்படுகிறார்கள் என்பது வெட்டவெளிச்சமாக காட்டியுள்ளது.

Tamil Nadu cop stops biker in viral video, reason will bring a smile

நெடுந்தூரம் பயணம் செய்யும் பைக்கர்கள் தங்களின் பாதுகாப்பிற்காக ரைடிங் ஜாக்கெட், கையுறைகள், தரமான ஹெட்மேட் என பலவற்றை வைத்திருப்பார்கள். அதே நேரத்தில் பைக்கில் செல்லும்போது Vlog செய்வதையும் பல இளைஞர்கள் வாடிக்கையாக வைத்துள்ளார்கள். இதனால் தங்கள் ஹெல்மெட்யின் மேல்புறம் கேமரா ஒன்றையும் வைத்திருப்பார்கள்.

அந்த வகையில் சில இடங்களில் காவலர்கள் பைக்கர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்யும் பொது, சில நேரங்களில் கடினமாக நடந்து கொள்வது உண்டு. அப்போது அந்த கேமராவில் பதிவாகும் வீடியோக்கள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். அந்த வகையில் கர்நாடக வாலிபர் ஒருவர், தமிழகத்தில் தனக்கு நேர்ந்த அனுபவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

Tamil Nadu cop stops biker in viral video, reason will bring a smile

கர்நாடக மாநில பைக்கர் AnnyArun என்பவர், தன்னுடைய கேடிஎம் பைக்கில் பாண்டிச்சேரியிலிருந்து சாலைப் பயணமாகத் தென்காசிக்குப் பயணமாகிக் கொண்டிருந்தார். அப்போது அவரை காவலர் ஒருவர் வழிமறித்தார். ஏதோ வாகனப் பதிவுச் சான்றிதழ், இன்சூரன்ஸ் போன்றவற்றைக் கேட்கத்தான் அந்த காவலர் அவரை நிறுத்தியதாக எண்ணினார்.

Tamil Nadu cop stops biker in viral video, reason will bring a smile

அந்த காவலர், நீங்கள் கர்நாடகாவை சேர்ந்தவரா எனக் கேட்கிறார். ஆமாம் என அந்த வாலிபர் கூறும்போது. சாலையில் செல்லும் அரசுப் பேருந்தைச் சுட்டிக்காட்டி, இது போன்ற அரசு பேருந்து ஒன்று முன்னாடி சென்றுகொண்டிருக்கிறது, அதில் உள்ள அம்மா ஒருவர் இந்த மருந்து பாட்டிலைத் தவறவிட்டுவிட்டார். நீங்கள் வேகமாக பஸ்ஸை முந்திச்சென்று பேருந்தில் செல்லும் அந்த அம்மாவிடம் இந்த மருத்து பாட்டிலைக் கொடுத்து விடுங்கள் என்கிறார்.

Tamil Nadu cop stops biker in viral video, reason will bring a smile

உடனே அந்த பாட்டிலைப் பெற்றுக்கொண்ட கர்நாடக வாலிபர், தனது பைக்கை வேகமாகச் செலுத்திச் செல்லும் போது காவலர் சொன்னது போலவே பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதனை நிறுத்தச் சொல்லி டிரைவரிடம் சைகை காட்டி முன்னாள் சென்று தனது இருசக்கர வாகனத்தை நிறுத்துகிறார். பின்னர் நடந்தவற்றை விளக்கிக்கூறி தன்னிடம் இருந்த மருந்து பாட்டிலை அந்த அம்மாவிடம் கொடுக்கிறார்.

Tamil Nadu cop stops biker in viral video, reason will bring a smile

இந்த வீடியோவை அந்த கர்நாடக வாலிபர் தன்னுடைய யுடியூப் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். காவலரின் மனிதநேயத்தை அவர் வியந்து பாராட்டியிருக்கிறார். இந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் அந்த காவலரைப் பாராட்டி வருகிறார்கள். காவல்துறையினர் மீது சில விமர்சனங்கள் இருந்தாலும், இதுபோன்ற காவலர்கள் காவல்துறை என்பது எப்போதுமே மக்களுக்கான பணி என்பதை நிரூபித்து வருகிறார்கள் என நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamil Nadu cop stops biker in viral video, reason will bring a smile | Tamil Nadu News.