'இப்போ உள்ள பசங்களுக்கு...' மொதல்ல கிரிக்கெட்னா என்ன'னு தெரியல...! வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர்களை விளாசி தள்ளிய முன்னாள் வீரர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | May 11, 2021 08:43 PM

இப்போது இருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் என்றாலே என்ன என தெரியவில்லை என்று காட்டமாக விமர்சித்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர்.

The former cricketer has slammed the young players

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் கர்ட்லி ஆம்புரோஸ் தங்கள் நாட்டு வீரர்களை குறித்து வேதனையுடன் கூறிய சம்பவம் வைரலாகி வருகிறது.

அதாவது, 'மேற்கிந்தியத் தீவுகளில் மேற்கிந்தியர்களுக்கு கிரிக்கெட் என்றாலே என்ன என முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் மேற்கிந்தியத் தீவுகளிலும், வெளிநாடுகளிலும் இன்றுள்ள பெரும்பாலான இளைஞர்கள் விளையாடுகிறார்கள்.

இதை நான் சொல்வதால் எனக்கும், இப்போதிருக்கும் வீரர்களுக்கும் எந்தவிதமான மதிப்புக் குறைபாடும் இல்லை. ஏனென்றால், இப்போது நம்மிடம் இருக்கும் வீரர்களில் சிலர் சிறப்பாகச் செயல்படுபவர்களாக இருக்கிறார்கள், எதிர்காலத்தில் சிறப்பாக வளர்வார்கள்.

இருந்தாலும் நாங்கள் இருந்த சமயத்தில் அந்தப் பொன்னான, புனிதமான நாட்கள் மீண்டும் வராது. வரும் என்ற நம்பிக்கையும் எனக்கு இல்லை.

விவியன் ரிச்சார்ட்ஸ், டேமோன்ட் ஹெயின்ஸ், க்ரீனிட்ஜ், பிரையன் லாரா, ரிச்சி ரிச்சர்ட்ஸன் ஆகியோரைப் போல் மற்றொருவரைக் கண்டுபிடிப்பது கடினம். இவர்கள் மட்டுமல்ல மால்கம் மார்ஷல், ஆம்புரோஸ், வால்ஷ், மைக்கேல் ஹோல்டிங், ஆன்டி ராபர்ட்ஸ், லாய்டு எனப் பட்டியல் சொல்லி கொண்டே போகலாம்.

The former cricketer has slammed the young players

தரமான கிரிக்கெட் வீரர்களைக் கண்டறிவது என்பது முற்றிலும் கடினமான செயல். நாங்கள் உலகிலேயே சிறந்த அணியாக இருந்தபோது, உலகம் முழுவதும் சென்று நாங்கள் துணிச்சலாக நடைபோட்டு எங்கள் திறமையை வெளிப்படுத்தினோம், வியக்க வைத்தோம்.

இப்போதோ ஐசிசி தரவரிசையில் முன்னேறுவதும் கடினமானதாக இருக்கிறது. நாங்கள் ஆடிய புனிதமான நாட்கள் இனிமேல் வரும் என்று நான் நினைக்கவில்லை' எனக் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. The former cricketer has slammed the young players | Sports News.