''முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்''... தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார் ஸ்டாலின்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றுள்ளார்.

கொரோனா பரவல் காரணமாகச் சென்னை கிண்டி ராஜ்பவனில் இதற்கான பதவியேற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. காலை 9 மணியளவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆளுநர் மாளிகை வருகை தந்தார். பின்னர் பதவியேற்க உள்ள அமைச்சர்களை ஆளுநருக்கு மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர், மு.க.ஸ்டாலினுக்குத் தமிழக முதலமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும்..’ என்று கூறி பதவியேற்றுக் கொண்டார் ஸ்டாலின். அவரை தொடர்ந்து 33 அமைச்சர்கள் ஒவ்வொருவராகப் பதவிப் பிரமாணம் ஏற்று வருகின்றனர்.
இந்த விழாவில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலின் பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மு.க.ஸ்டாலின் மரியாதை செய்ய இருக்கிறார்.
மறைந்த திமுக நிர்வாகி சிட்டி பாபுவின் இல்லத்திற்குச் சென்று அவரின் உருவப் படத்திற்கும் மரியாதை செய்ய உள்ளார். தொடர்ச்சியாக கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்திற்குச் சென்று தனது தாயார் தயாளு அம்மாளைச் சந்தித்து வாழ்த்து பெற இருக்கிறார் மு.க.ஸ்டாலின்

மற்ற செய்திகள்
