'பாஜக விளம்பரத்தில் ப.சிதம்பரம் மருமகளின் படம்'... 'செம கடுப்பான ஸ்ரீநிதி'.... ட்விட்டரில் வைரலாகும் அவர் சொன்ன பதில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாஜக தேர்தல் விளம்பரத்தில் ப.சிதம்பரம் மருமகளின் படம் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழகச் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பல கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஒரு புறம் களத்தில் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வரும் நிலையில், இணையம் வாயிலாகவும் பல கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் பாஜக ட்விட்டரில் பகிர்ந்த தேர்தல் பிரச்சார விளம்பரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் மருமகளும், சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்தின் மனைவியுமான ஸ்ரீநிதி பரத நாட்டியம் ஆடும் படத்தை தமிழக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அதில் ‘தாமரை மலரட்டும்; தமிழகம் வளரட்டும்; வாக்களிப்பீர் தாமரைக்கே’ என்று பதிவிட்டிருந்தது.
இந்நிலையில், பாஜக தனது புகைப்படத்தை, பாஜகவின் தேர்தல் பிரசாரத்திற்குப் பயன்படுத்தியது அபத்தமானது என்று கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தில் தாமரை என்றும் மலராது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல், தமிழக காங்கிரஸ் கட்சியும் பாஜகவின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தி.மு.க., ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி வழிகாட்டுதலில் தயாரிக்கப்பட்ட செம்மொழி கீதத்தில் இடம்பெற்றிருந்த இதுதொடர்பான ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம் பரதநாட்டியம் ஆடிய புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இந்தத்தகவல் வைரலானதும் அப்பதிவைத் தமிழக பா.ஜ.க நீக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஒரு தேசிய கட்சி தனது விளம்பரத்திற்குப் பயன்படுத்தும் புகைப்படங்கள் குறித்த தகவல்களைத் தெரியாமலா பயன்படுத்துவார்கள் எனக் கிண்டலாகப் பதிவிட்டு வருகிறார்கள்.
Ridiculous that the @bjp4india has used my image for their propaganda. தமிழகத்தில் தாமரை என்றும் மலராது. @BJP4India
— srinidhi chidambaram (@srinidhichid) March 30, 2021