அடுக்குமாடி வீட்டில் சூதாட்ட கிளப்?.. சென்னையில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாம்!.. இதுதான் நடந்தது!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நுங்கம்பாக்கத்தில் நடிகர் ஷாமுக்கு சொந்தமான அடுக்குமாடி வீடு ஒன்றில், சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து அதிரடியாக அங்கு சென்று சோதனை செய்த போது, ஷாம் உள்ளிட்ட 14 பேர் பணத்தை வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதன் பின்னர் ஷாமின் நண்பர்களான தொழிலதிபர்கள், தனியார் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், உதவி இயக்குநர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரை கைது செய்த போலீசார் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பறிமுதல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஊரடங்கு காரணமாக, தடைபட்ட திரைப்பட படப்பிடிப்புகளை அடுத்து தனது நுங்கம்பாக்கம் வீட்டை ஷாம் சீட்டாட்ட கிளப்பாகவே பயன்படுத்தி வந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தொடர் புகார்களால் கைது செய்யப்பட்ட ஷாம் உள்ளிட்டவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
எனினும் கைது செய்யப்பட்டவர்கள் மீது தொற்று நோய் பரப்புதல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு போலீஸார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

மற்ற செய்திகள்
