நாங்கள் 'ஒன்றாக' வாழ்ந்தோம்... 9 மணி நேர 'தீவிர' விசாரணையில்... போலீசாரிடம் 'உண்மைகளை' ஒப்புக்கொண்ட நடிகை!
முகப்பு > செய்திகள் > இந்தியாசுஷாந்தை திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தது உண்மை தான் என நடிகை ரியா சக்ரபோர்த்தி தெரிவித்து இருக்கிறார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14-ம் தேதி தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் மூச்சுத்திணறி இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரது மரணத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சுஷாந்துடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்ட நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். 9 மணி நேரம் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி இருவரும் ஒன்றாக வாழ்ந்ததை ரியா ஒப்புக்கொண்டு இருக்கிறார்.
நவம்பரில் இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்ததாகவும், இடையில் சண்டை போட்டு பிரிந்து விட்டதாகவும் விசாரணையில் தெரிவித்து இருக்கிறார். மேலும் அவரது மொபைலில் இருவரும் புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொண்டதும் தெரிய வந்துள்ளது. இருவரும் அடிக்கடி சாட் செய்தும் வந்துள்ளனர். சண்டை போட்டு பிரிந்தாலும் தினசரி இரவு தூங்க செல்வதற்கு முன் சுஷாந்த், ரியாவிடம் பேசி வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது.
இதுவரை சுஷாந்த் மரணம் தொடர்பாக 13 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி இருக்கின்றனர். மேலும் பலரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்
