‘சொன்னா கேட்க மாட்டீங்களா?’... 'முல்லைப் பெரியாறு விவகாரம்’.. ‘உச்சநீதிமன்றம் அதிரடி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jul 04, 2019 01:27 PM

முல்லைப் பெரியாறு அணையில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக, கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

supreme court condemn kerala government in mullai periyaru dam issue

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், கேரள அரசு வாகன நிறுத்துமிடம் கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில்  தமிழக அரசு முறையீடு செய்திருந்தது. இந்த முறையீட்டு மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், கேரள அரசுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், சரமாரி கேள்விகளையும் கேட்டுள்ளது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றம் கூறுகையில், ‘முல்லைப் பெரியாறு வாகன நிறுத்துமிடம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை பின்பற்ற மாட்டீர்களா? உத்தரவை மீறி எதற்காக கட்டுமானப் பணி மேற்கொள்வீர்கள்? வாகன நிறுத்துமிடம் தொடர்பாக கேரள அதிகாரிகள் பொய் சொல்கிறார்கள். எத்தனை வாகன நிறுத்துமிட கட்டுமானப் பணிகளை மேற்கொள்வீர்கள்? 15 நாட்களுக்குள் தங்களின் பதிலை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.

Tags : #MULLAIPERIYAR #SUPREMECOURT