நல்ல பிளேயர் தான் ஆனா டீமை 'ஸ்பாயில்' பண்ணிருவாரு... வெளியான புதிய தகவல்... தோனி யாரை சொன்னாரு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2020-ம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் யுஏஇ-யில் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் பிசிசிஐ இதுவரை வெளியிடவில்லை. கொரோனா காரணமாக மூடப்பட்ட அரங்கில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என கூறப்படுகிறது.
![MS Dhoni refused to take an ‘outstanding player’ in CSK? MS Dhoni refused to take an ‘outstanding player’ in CSK?](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/ms-dhoni-refused-to-take-an-outstanding-player-in-csk.jpg)
இந்து நிலையில் முன்னாள் பிசிசிஐ தலைவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவருமான சீனிவாசன் சமீபத்தில் தோனி குறித்த தகவல் ஒன்றை வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது மிகவும் சிறப்பாக ஆடக்கூடிய வீரர் ஒருவரை தாங்கள் ரெகமண்ட் செய்ததாகவும், பதிலுக்கு தோனி, '' அவர் வேணாம் சார். நம்ம டீமை ஸ்பாயில் பண்ணிருவாரு,'' என மறுத்து விட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் அந்த வீரர் யார் என்பது குறித்த தகவலை அவர் வெளிப்படுத்தவில்லை. எனினும் அவர் யாராக இருக்கும்? என ரசிகர்கள் தீவிரமாக யோசித்து வருகின்றனர். தோனி கடைசியாக கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் விளையாடினார். அதற்குப்பின் அவர் எந்தவொரு போட்டியிலும் பங்கேற்கவில்லை என்பதால் ஐபிஎல் போட்டிகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)