நடுராத்திரி பெரிய 'சூட்கேஸ்' எடுத்துட்டு கார்ல போனாங்க... சுஷாந்த் வழக்கில் புதிய திருப்பம்... கண்டுபிடிக்க முடியாமல் 'திணறும்' போலீஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதன்னுடைய மகனின் மரணத்திற்கு காதலி ரியா தான் காரணம் என சுஷாந்தின் தந்தை கே.கே.சிங் போலீசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திட பீஹார் தனிப்படை போலீசார் மும்பை சென்றனர். ஆனால் ரியா சக்ரபோர்த்தி இருக்குமிடத்தை அவர்களால் கண்டறிய முடியவில்லை.
![Rhea Chakraborty left her building ‘in the middle of the night: Report Rhea Chakraborty left her building ‘in the middle of the night: Report](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/rhea-chakraborty-left-her-building-in-the-middle-of-the-night-report.jpg)
இதையடுத்து கண்ணாமூச்சி ஆடாமல் நடிகை ரியா விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என பீஹார் போலீசார் பேட்டி அளித்துள்ளனர். இந்த நிலையில் தான் தங்கியிருந்த வீட்டில் இருந்து இரவோடு இரவாக நடிகை ரியா வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதுகுறித்து ரியா தங்கியிருந்த கட்டிடத்தின் சூப்பர்வைசர் கூறுகையில், '' கடந்த 3 நாட்களுக்கு முன்பாக நள்ளிரவில் ரியா தன்னுடைய சகோதரர் மற்றும் குடும்பத்தினருடன் பெரிய சூட்கேஸ் ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியேறினார். அவர்கள் ஊதா நிற காரில் சென்றனர்,'' என தெரிவித்து இருக்கிறார். இதனால் ரியா தற்போது எங்கிருக்கிறார் என்பது சஸ்பென்ஸாக உள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)