BREAKING: சென்னையில் கல்லூரி ஊழியரை கத்தியால் குத்தி கொன்ற கல்லூரி மாணவி.. பாலியல் தொந்தரவால் ஆத்திரம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: கேளம்பாக்கத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கல்லூரியில் பணிபுரியும் ஊழியரை குத்தி கொலை செய்துள்ளார்.
![student killed the employee who sexually harassed her student killed the employee who sexually harassed her](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/student-killed-the-employee-who-sexually-harassed-her.jpg)
கேளம்பாக்கம் அருகே பாலியல் தொல்லை கொடுத்த செந்தில் (44) என்னும் கல்லூரி ஊழியரை 21 வயதே ஆன கல்லூரி மாணவி ஒருவர் நண்பர்களுடன் சேர்ந்து குத்திக் கொலை செய்துள்ளார் என போலீசார் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தனக்கு திருமணம் ஆனதை மறைத்து அவர் அந்த மாணவியுடன் பழகி வந்துள்ளார். அந்த மாணவி திருமணம் ஆகாதவர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது. செந்தில் திருமணம் ஆனவர் என்பது தெரிந்தபின் அவருடன் பழகுவதை மாணவி தவிர்த்து வந்துள்ளார்.
ஆனால் அவர் தொடர்ந்து அந்த மானவிற்கு தொந்தரவு கொடுத்துள்ளார். நேரில் சந்திக்க வேண்டும் என கூறி வரவழைத்துள்ளார். அப்போது அவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சராமரியாக குத்தி கொலை செய்துள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)