'பிபின் ராவத் மனைவி மதுலிகா ராவத்..' யார் இவர்? 'உருகும் ராணுவ குடும்பங்கள்...' - என்ன செய்தார்?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய ராணுவத்தின் முப்படை தளபதியான ஜெனரல் பிபின் ராவத் பயணம் செய்த விமான நேற்று நடுவானில் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியில் ஏற்படுத்தியது. அதில் தான் ஜெனரல் பிபின் ராவத் அவர்களின் மனைவியும் பயணம் செய்து உயிரிழந்துள்ளார்.

நேற்று நடந்த விமான விபத்தை குறித்து அறிந்த பலரும் இணையத்தில் யார் இந்த மதுலிகா ராவத் என தேடி வருகின்றனர்.
இந்திய ராணுவத்தின் முப்படை தளபதியான ஜெனரல் பிபின் ராவத் அவர்களின் மனைவி தான் மதுலிகா ராவத். மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஷாதோலில் அமைந்துள்ள சோஹாக்பூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மதுலிகா ராவத். இவரின் தாயார் ஜோதி பிரபா சிங் தந்தை மகேந்திர சிங். இவருக்கு ஹர்ஷ்வர்தன் சிங் மற்றும் யஷ்வர்தன் சிங் என்ற சகோதரர்களும் உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான மகேந்திர சிங் தற்போது உயிரோடு இல்லை. மதுலிகா ராவத் தனது இளமைக்கால படிப்பை ஷாதோலில் முடித்துள்ளார்.
அதோடு, மேல் படிப்பை குவாலியர் சென்று, சிந்தியா பள்ளியில் படித்த அவர் பின் டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.
பிபின் ராவத்திற்கும் மதுலிகாவிற்கும் 1986-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்குத் திருமணமாகிவிட்டது. இரண்டாவது மகள் படித்துக் கொண்டிருக்கிறார்.
மதுலிகா ராவத், 1966ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ராணுவ வீரர்களின் மனைவிகள் நலச் சங்கத்தின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். அதோடு கணவரை இழந்த ராணுவ வீரர்களின் மனைவிகள், புற்றுநோயாளிகள், ஊனமுற்ற குழந்தைகளுக்கான சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
