“யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்?” .. ‘கேரளா.. பெங்களூரு.. கல்ஃப்’ .. காய்நகர்த்தல் முதல் கைது வரை.. அதிரவைக்கும் பின்னணி!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலத்தில் ஐக்கிய அமீரகத்தில் இருந்து வந்த பார்சல் மூலம் 30 கிலோ தங்கக் கடத்தல் நடந்ததாக சுங்கத்துறையினர் கண்டுபிடித்தனர். இந்த விவகாரத்தில் சிக்கிய ஸரித் என்பவர் மூலமாக., கேரள தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றிவரும் ஸ்வப்னா சுரேஷ்க்கு இதில் தொடர்பு இருப்பதாக தெரியவந்ததை அடுத்து, கேரள அரசியல் பரபரப்பானது. யார் இந்த ஸ்வப்னா சுரேஷ் என்று பார்க்கலாம்.

அபுதாபியில் பிறந்து, வளர்ந்து, அங்கு படித்த ஸ்வப்னா சுரேஷ் அரபு மொழியைச் சரளமாகப் பேசக்கூடியவர். அதோடு பிறப்பால் மலையாளி என்பதால், மலையாளம், இந்தி, ஆங்கிலம் எனப் பல மொழிகளிலும் புலமைபெற்ற ஸ்வப்னா சுரேஷ் திருவனந்தபுரம் அருகே இருக்கும் பலராமபுரத்தை பூர்வீகமாக் கொண்டவர். .ஸ்வப்னா சுரேஷுக்குத் திருமணமாகி கணவரும் இரு குழந்தைகளும் உள்ளனர். அபுதாபியிலிருந்து வந்தபின் பலராமபுரத்தில் ஒரு டிராவல் ஏஜென்சியில் பணியில் சேர்ந்த ஸ்வப்னா சுரேஷ், 2013-ம், ஆண்டு ஏர் இந்தியா நிறுவனத்தில் மனிதவளத் துறையில் நிர்வாகியாகப் பணியில் சேர்ந்தார்.
இந்தப் பணியில் இருந்தபோதுதான் ஸ்வப்னா சுரேஷ் உயர் அதிகாரி ஒருவருடன் ஏற்பட்ட மோதலில் அவர் மீது போலியாக பாலியல் புகார் அளித்தார். இப்படி 17 புகார்களைப் போலியான பெயரில் ஸ்வப்னா சுரேஷ் அளித்ததும், ஆனால் அரசியல் வட்டாரத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும் இருந்த செல்வாக்குகளைப் பயன்படுத்தி ஸ்வப்னாவை இவ்வழக்கிலிருந்து தப்பியதாகக்கூறப்படுகிறது. பின்னர் ஏர் இந்தியாவிலிருந்து வேலையை ராஜினாமா செய்த ஸ்வப்னா சுரேஷ் மீண்டும் அபுதாபிக்குச் சென்று, பின்னர் மீண்டும் 2016-ம் ஆண்டு திருவனந்தபுரம் வந்து, அங்குள்ள ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒப்பந்த அடிப்படையில் சேர்ந்து கேரள அரசு அதிகாரிகள் மட்டத்தில் நட்புறவை ஏற்படுத்திக்கொண்டார். எனினும், கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஸ்வப்னா சுரேஷ் மீது மீண்டும் எழுந்த முறைகேடு புகாரை அடுத்து, ஐக்கிய அரபு அமீரகப் பணியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
அதன் பின் கேரள அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் வர்த்தக மேம்பாட்டு மேலாளராக, தகவல் தொழில்நுட்பத் துறை செயலரும், கேரள முதல்வர் பினராய் விஜயனின் தனிச் செயலாளருமான சிவசங்கரனுக்கு கீழ் பணியாற்றியபோதுதான் ஐக்கிய அரபு அமீரகத் தூதரகம் மூலம் தங்கம் கடத்தப்பட்டு பிடிபட்டபோது, அதில் முக்கிய நபராகவும், தேடப்படுவராகவும் ஸ்வப்னா சுரேஷ் மாறினார். மேலும், கேரள முதல்வர் பினராயி விஜயனின் தனிச்செயலாளராகவும் கூடுதலாகப் பதவி வகித்து வந்த சிவசங்கரனின் பதவியும் பறிக்கப்பட்டது. இதனிடையே தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் பெங்களூரில் வைத்து, தேசிய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

மற்ற செய்திகள்
