முதல்ல யாரு காதலை சொன்னது?.. சீமான்.. .. சொன்ன குட்டி லவ் ஸ்டோரி.. வீடியோ..!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Madhavan P | Nov 03, 2022 10:09 PM

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அவரது மனைவி கயல்விழி தங்களது காதல் பயணம் குறித்து பேசியுள்ளனர்.

Seeman and his wife kayalvizhi shares their love proposal moment

தமிழக அரசியல் சூழலில் பரபரப்பாக இயங்கி வருபவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அண்மையில் Behindwoods 'மக்களுடன் சீமான்' எனும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியை கலக்க போவது யாரு T.சரவண குமார் மற்றும் அசார் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இதில் தனது மனைவி கயல்விழியுடன் கலந்துகொண்ட சீமான் தங்களது வாழ்க்கை அனுபவம் குறித்து பல்வேறு தகவல்களை மக்களுடன் பகிர்ந்துகொண்டார்.

Seeman and his wife kayalvizhi shares their love proposal moment

இதனை தொடர்ந்து, தங்களுடைய முதல் சந்திப்பு பற்றியும், பின்னர் அது காதலாக மாறிய விதம் குறித்தும் இருவரும் பேசினர். அப்போது, இருவரிடமும் இருவரது புகைப்படமும் ஒட்டப்பட்ட இரண்டு போர்டுகள் கொடுக்கப்பட்டன. தொகுப்பாளர்களின் கேள்விகளுக்கு பொருத்தமானவர்களின் போர்டை உயர்த்த வேண்டும் என இருவரிடமும் சொல்ல, அங்கிருந்த அனைவரும் ஆர்வமடைந்தனர்.

இதனை தொடர்ந்து, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அசார், "உங்களுக்குள் முதலில் காதலை சொல்லியது யார்?" என இருவரிடமும் கேட்டார். அப்போது,"நான்தான். சந்தேகமே வேண்டாம்" என சட்டென்று சொல்லினார் சீமான். இதை தொடர்ந்து பேசிய அவர்,"ஆரம்ப காலத்தில் திருமணமே வேண்டாம் என்பதுதான் என்னுடைய முடிவு. அதன்பின்னர் கயலை பார்த்த பிறகு திருமணம் செய்யாம இருக்கது தப்புன்னு முடிவுக்கு வந்துட்டேன். இந்த மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா யாரு கல்யாணம் பண்ணாம இருப்பா?" என ஜாலியாக சொல்ல, அருகில் இருந்த கயல்விழி முகத்தை மூடிக்கொண்டு சிரித்தார்.

Seeman and his wife kayalvizhi shares their love proposal moment

பின்னர், திருமணத்திற்கு முன்னர் பழ.நெடுமாறன் தனக்கு வழங்கிய அறிவுரை குறித்து பேசிய சீமான்,"ஐயா பழ.நெடுமாறன் பலதடவை இதை சொல்லிருக்காங்க. பொது வாழ்க்கைல இருக்கவங்க திருமணம் செஞ்சுக்கணும். இல்லைன்னா ஏதாவது பேச்சு வரும்னு சொன்னாங்க. அந்த சூழ்நிலைல தான் இவங்க வந்து சிக்கிட்டாங்க. ஆரம்பத்துல அப்படி இப்படினு சொன்னாங்க.. தூக்கிட்டு போய் தாலி கட்டிடுவேன்னு சொல்லிட்டேன்" என சீமான் சொல்ல அங்கிருந்தவர்களின் சிரிப்பொலியால் அரங்கமே நிறைந்தது.

 

Tags : #SEEMAN #KAYALVIZHI #NTK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Seeman and his wife kayalvizhi shares their love proposal moment | Tamil Nadu News.