“மனித இனமே கண்டிச்ச பிறகும்”.. #சத்தியமா_விடவே_கூடாது! கொந்தளித்த ரஜினி.. அதிர்ந்த ட்விட்டர்! ட்ரெண்டிங்கில் முதலிடம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாசாத்தான்குளத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை அடுத்து அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் , கிரிக்கெட் வீரர்கள் என ஒட்டுமொத்த இந்தியாவே இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு வலியுறுத்தி வரும் சூழலில், இது தொடர்பான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்து விசாரித்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் மதுரை நீதிமன்றத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையிலும் நீதியை வலியுறுத்தும் வகையிலும் ரஜினிகாந்த் தனது தரப்பிலிருந்து ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், “தந்தையும் மகனும் சித்ரவதை செய்து மிருகத்தனமான கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்திலும் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும், பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த
#சத்தியமா_விடவே_கூடாது pic.twitter.com/MLwTKg1x4a
— Rajinikanth (@rajinikanth) July 1, 2020
தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆகவேண்டும். விடக்கூடாது, சத்தியமா விடவே கூடாது!” என குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
