தமிழ்நாடு போலீஸ் அதிரடி உத்தரவு: ‘பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ இயங்க திடீர் 'தடை'! - சாத்தான்குளம் விவகாரத்தில் 'மாவட்டங்களில்' நடவடிக்கை!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டதன் பெயரில், தாக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக மதுரை ஐகோர்ட் உத்தரவின் பெயரில் சிபிசிஐடி கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்- இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், போலீஸ் ஏட்டு முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய ஐந்து பேரை கைது செய்தனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கும் தொடர்பு இருப்பதாக பரவலான குற்றச்சாட்டு இருந்து வந்தது. இந்நிலையில், திருச்சி, கரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய 12 மாவட்டங்களில் காவல் பணியில் இயங்க பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரோந்து, வாகன தணிக்கை, கைது போன்ற பணிகளில் பிரெண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், அதனை மீறி பிரெண்ட்ஸ் ஆப் போலீசை பயன்படுத்தினால் சம்மந்தப்பட்ட போலீஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி சரக டிஐஜி தெரிவித்துள்ளார்.
அதே வேளை, பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழு சமூக பணிகளில் தொடர தடையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
