'ஏடிஎம் கீபேட் வொர்க் ஆகல...' 'டெபாசிட் பண்ணிட்டேன், கொஞ்ச நேரத்துல மெசேஜ் வரும்...' - மெசேஜ்க்காக காத்திருப்பு...' ஆனால் நடந்தது என்ன...? - அடுத்தடுத்து நடந்த திருப்பங்கள்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோயம்பத்தூர் மாவட்டத்தில் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்வதாக கூறி முதியவரிடம் சுமார் 21,500 பணத்தை மோசடி செய்த பணத்தை காவல்துறையினர் சுமார் 24 மணி நேரத்திற்குள் மீட்டு ஒப்படைத்த சம்பவம் நடந்துள்ளது.

கோயம்பத்தூர் மாவட்டம் துடியலூர் பகுதியில் இருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏடிஎம்மில் நேற்று கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் சுமார் 21,500 ரூபாயை தன் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வந்துள்ளார். அப்போது ஏடிஎம்மில் கீபேட் சரியாக வேலை செய்யாததால், அருகில் இருந்த நபர் ஒருவர் சந்திரமோகணுக்கு உதவுவது போல வந்து அவரின் வேறொரு கணக்கிற்கு பணத்தை டெபாசிட் செய்துள்ளார்.
மேலும் தான் டெபாசிட் செய்து விட்டதாகவும், உங்களுக்கும் மெசேஜ் சிறிது நேரத்தில் வரும் எனக் கூறி அங்கிருத்தி பைக்கில் ஏறி சென்றுவிட்டார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மெசேஜ் வராததால் சந்திரசேகரன் தன் வங்கிக்கணக்கை பரிசோதனை செய்துள்ளார். ஆனால் அப்போதும் பணம் டெபாசிட் செய்யப்படவில்லை.
அதையடுத்து சந்திரமோகன் உடனடியாக வங்கி நிர்வாகத்தை அணுகி, தான் மோசடி செய்யப்பட்டது குறித்து புகார் தெரிவித்தார். டெபாசிட் செய்ய உதவிய நபர் வேறு கணக்கில் செய்து மோசடி செய்தது தெரிந்தது. பின்னர், வங்கி நிர்வாகத்தினர் அந்த வங்கிக் கணக்கை முடக்க முயல்வதற்குள் அக்கணக்கில் இருந்து ரூ.20 ஆயிரம் எடுக்கப்பட்டது தெரியவந்தது.
அதன்பின் சந்திரமோகன் அளித்த புகாரின் அடிப்படையில் துடியலூர் இன்ஸ்பெக்டர் பாலமுரளிசுந்தரம், எஸ்ஐ தாமோதரன் ஆகியோர் சிசிடிவி காட்சியை பெற்று விசாரணை நடத்தியதில், கோவை ஒண்டிபுதூர் காமாட்சிபுரத்தைச் சேர்ந்த ஒருவரின் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது தெரியவந்ததுள்ளது.
அடுத்தக்கட்டமாக காமாட்சிபுரத்தைச் சேர்ந்தவரிடம் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்டவரின் ஏடிஎம் கார்டு தொலைந்தததாகவும் அதை முடக்க வங்கிக்கு தெரிவித்தும் முடக்கவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் தன்னுடைய வங்கிக் கணக்கில் ரூ.20 ஆயிரம் டெபாசிட் ஆனதால் தன் கார்டை எடுத்தவர் எடுப்பதற்கு முன் காசோலை மூலம் நான் பணத்தை எடுத்தேன், என தெரிவித்துள்ளார்.
அதையடுத்து துடியலூர் காவல்துறையினர் அவரிடம் இருந்து பணத்தை மீட்டு சந்திரமோகனிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். மேலும் பறிபோனதாக நினைத்த பணத்தை 24 மணி நேரத்தில் மீட்டுக்கொடுத்த துடியலூர் காவல்துறையினருக்கு சந்திரமோகன் நன்றி தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
