அவரு வெளியூரு போயிருக்காரே... 'சண்டை' போட்ட கணவனுக்கு மனைவியால் ஏற்பட்ட கதி... 'ஹைலைட்டே' அந்த விஷயம் தான்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலத்தில் கணவனை கொன்ற மனைவி அதே வீட்டில் ஒருவாரம் வசித்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

சேலம் கந்தம்பட்டி அருகே உள்ள செஞ்சிக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ராஜகிரி-பூங்கொடி. இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மகள் பருவமடைந்த காரணத்தால் கணவனோடு சேர்ந்து வாழும் முடிவோடு பூங்கொடி வந்ததாகவும், இருப்பினும் அவ்வப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, கடந்த 18 நாட்களுக்கு முன்பாக குழந்தைகள் இருவரும் உறவினர்கள் திருமணத்திற்கு சென்றபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. அப்போது பூங்கொடி ராஜகிரியை தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக வீட்டின் பின்புறம் குழி தோண்டி புதைத்து விட்டு, ஒரு வாரமாக அந்த வீட்டிலேயே தங்கி இருந்துள்ளார். ராஜகிரி வெளியூர் சென்றிருப்பதாக பிள்ளைகள் மற்றும் உறவினர்களிடம் பூங்கொடி கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பூங்கொடியும் தலைமறைவானார்.
பின்னர், பூங்கொடியின் மகள் வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது கழிவறை அருகே ஒரு இடத்தில் பழைய பொருட்கள் அடுக்கி வைத்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து உறவினர்கள் மூலம் சூரமங்கலம் காவல்நிலையத்திற்கு புகார் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்ட காவல்துறையினர், ராஜகிரியின் உடல் புதைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். சடலத்தை மீட்ட காவல்துறையினர் தலைமறைவாகியுள்ள பூங்கொடியை தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
