"நைசா பேச்சு குடுத்துட்டு இருந்த பசங்க.. திடீர்னு பண்ண காரியம்.." காய்கறி பாட்டிக்கு நேர்ந்த பதற வைக்கும் சம்பவம்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி வசந்தா.
![Tirupattur old lady money snatched by youth cctv video Tirupattur old lady money snatched by youth cctv video](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/tirupattur-old-lady-money-snatched-by-youth-cctv-video.jpg)
பிள்ளைகள் இல்லாத வசந்தா, தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும், தன்னுடைய வயிற்று பிழைப்புக்கு வேண்டி, வாணியம்பாடி பஜார் வீதியில் காய்கறி வியாபாரமும் வசந்தா செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், வழக்கம் போல வாணியம்பாடியில் உள்ள கணியம்பாடி பஜார் வீதி பகுதியில் உள்ள சாலை ஓரத்தில், புளி மற்றும் காய்கறி உள்ளிட்ட பொருட்களை வசந்தா விற்றுக் கொண்டிருந்துள்ளார்.
பேச்சு கொடுத்த இளைஞர்
அந்த சமயத்தில், இளைஞர் ஒருவர் மூதாட்டி அருகே வந்துள்ளார். தொடர்ந்து, ஏதோ பொருள் வாங்குவது போல பேச்சு கொடுத்த செய்த இளைஞர், சிறிது நேரம் ஏதோ பேசியபடி நின்றுள்ளதாக தெரிகிறது. இன்னொரு பக்கம், அங்கே பைக்கில் வந்த இரண்டு இளைஞர்களுடன், காய்கறி கடை அருகே நின்ற இளைஞர் பேச்சு கொடுக்க, அங்கிருந்த ஆட்கள் சென்ற பிறகு, தான் வந்த திட்டத்தை நிறைவேற்றியுள்ளார்.
சிசிடிவி காட்சிகள்
கண் இமைக்கும் நேரத்தில், மூதாட்டி வசந்தாவிடம் இருந்த சுருக்குப்பையை, அந்த இளைஞர் திருடிக் கொண்டு, பைக்கில் வந்த இரண்டு பேருடன் தப்பித்தச் சென்று விட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலறியடித்து ஓடிய பாட்டி
இளைஞர்கள் திருடிய சுருக்குப் பையில், 10,000 ரூபாய் பணம் மற்றும் வெள்ளிக் கொலுசு இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தன்னுடைய பணம் பறி போனதும், அலறியடித்து கூச்சலிட்ட படியே ஓடியுள்ளார் மூதாட்டி. இதனைக் கேட்ட அக்கம் பக்கத்தினர், பைக்கில் சென்ற நபர்களை பிடிக்க முயன்றனர்.
ஆனால், அதற்குள் அந்த மூவரும் மோட்டார் சைக்கிளில் பறந்து விட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த வாணியம்பாடி போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சியினைக் கொண்டு, தப்பியோடிய 3 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பகல் நேரத்தில், கஷ்டப்பட்டு உழைக்கும் வயதான மூதாட்டி ஒருவரின் பணத்தை, இளைஞர்கள் திருடிச் சென்ற சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)