"வயச வெச்சு என் காதலை அசிங்கப் படுத்திட்ட..!".. ஆயிஷா சொன்னது குறித்து சீரியஸாக ஃபீல் பண்ணிய ராபர்ட் ..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Oct 30, 2022 01:27 PM

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க் பெயரில் நடந்த பல்வேறு குழப்பங்களுக்கு அசத்தலாக விடை அளித்திருந்தார் கமல்ஹாசன்.

Robert master about aysha who insulted his love in age

ஷெரினாவை தனலட்சுமி தான் கீழே தள்ளி விட்டார் என்ற விமர்சனம் இருந்தது. அசீம் உள்ளிட்ட பலரும் தனலட்சுமி தான் காரணம் என கைகாட்டி இருந்தனர். மறுபக்கம், விக்ரமன் உள்ளிட்ட சிலர் இது Accidental ஆக நடந்திருக்கலாம் என்றும் தனலட்சுமி மீது தவறில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

கடந்த வாரத்தில் இந்த விஷயம் பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது.

இதனிடையே, வார இறுதியில் வந்த கமல்ஹாசன், குறும்படம் போட்டு காட்டி ஷெரினா கீழே விழுந்ததற்கு தனலட்சுமி காரணமில்லை என்பதை உறுதி செய்தார். அந்த சமயத்தில் தனலட்சுமியை அனைவரும் கைதட்டி பாராட்டவும் செய்தனர். அதே போல, கடந்த வாரத்தில் அசீமின் செயல்பாடு குறித்தும் ஆவேசத்துடன் நேரடியாக அவரிடமே பேசி இருந்தார் கமல்ஹாசன். மேலும், குயின்சியின் தலைமை பண்பை கமல்ஹாசன் பாராட்டி இருந்ததும் சிறப்பசமாக பார்க்கப்பட்டிருந்தது.

Robert master about aysha who insulted his love in age

இந்த நிலையில், ஆயிஷா மீது ராபர்ட் மாஸ்டர் தெரிவித்த புகார் தொடர்பான செய்தி, தற்போது அதிகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிக்பாஸ் வீட்டில் அனைத்து போட்டியாளர்களின் பொம்மைகள் வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுக்கு தேவைப்படும் பொம்மையை எடுத்து அந்த போட்டியாளரை பற்றி பேசலாம் என்ற நிலை இருந்தது.

Robert master about aysha who insulted his love in age

அப்போது ஆயிஷாவின் பொம்மையை எடுத்து பேச ஆரம்பித்த ராபர்ட் மாஸ்டர், "நீ செய்த ஒரு விஷயம் எனக்கு பிடிக்கவே இல்லை. எனக்கு கஷ்டமாக இருந்தது. என்னுடைய வயதின் அடிப்படையில் நான் செய்த காதலை நீ அசிங்கப்படுத்தி விட்டாய். என்னுடைய வயசு 41. அந்த பொண்ணோட வயசு 22. அது பற்றிய விஷயத்தை நான் சொல்லி இருந்தேன். அதை வைத்து ஆயிஷா என்னை அசிங்கப்படுத்தி விட்டார். அதுவும் மூன்று முறைக்கு மேல் சொல்லி விட்டார். காதலையும் வயதையும் இணைத்து பேசியது பிடிக்கவில்லை" என கூறினார்.

இது பற்றி பின்னர் சக போட்டியாளர்கள் கேட்க, அந்த பெண்ணுக்கு பெரியப்பா வயதில் தான் இருப்பதாக ஆயிஷா குறிப்பிடத்தையும் தெரிவித்து ராபர்ட் உருக்கம் அடைகிறார்.

Robert master about aysha who insulted his love in age

இதன் பின்னர், ராபர்ட் மாஸ்டரிடம் பேசும் ஆயிஷா, "என்னுடைய கதையை நான் பிக்பாஸில் சொல்லவில்லை. அப்படி சொல்லி இருந்தால், என்னை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். நான் அந்த மாதிரி பொண்ணு கிடையாது. அந்த மாதிரி ஆளும் கிடையாது. நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. வெளியே போன பிறகு என்னை பற்றி நான் சொல்கிறேன்" என விளக்குகிறார். தொடர்ந்து, ராபர்ட்டும் சரி என கூறிக் கொண்டு கடந்து செல்கிறார்.

Tags : #ROBERT MASTER #AYSHA #BIGGBOSS TAMIL #BB6 TAMIL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Robert master about aysha who insulted his love in age | Tamil Nadu News.