எங்க வீட்டு பொண்ணு கூட வாட்ஸப் சாட் பண்ணுவியா...? 'கடுப்பான மாணவியின் உறவினர்...' நெஞ்சை உலுக்கும் கொடூர நிகழ்வு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவாரூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவியிடம் திருமணமான இளைஞர் ஒருவர் பேசி வந்ததால் உறவினர்கள் ஒன்று சேர்ந்து அவரை அடித்தே கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி பகுதியை அடுத்து இருக்கும் உள்ளூர் வட்டம் மேலத்தெருவில் வசித்து வருபவர் நவீன். 20 வயதான இவருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு தான் அதே பகுதியை சேர்ந்த புவனா என்னும் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் தற்போது நவீன் என்பவர் அதே தெருவை சேர்ந்த 12 ம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் நட்பாகி உள்ளார். இவர்களின் நட்பு வாட்ஸப் நம்பர் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இருவரும் வாட்ஸப் மூலம் பழகி வந்ததை அறிந்த நவீனின் மனைவி புவனா அந்த மாணவியை கண்டித்துள்ளார்.
இதை அறிந்த மாணவியின் சொந்தக்காரர்களான முருகானந்தம், முருகராஜ், சந்திரன், சுதாகர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பல் நவீனை கண்டிக்க நினைத்துள்ளனர். கண்டிக்க சென்ற இடத்தில், அந்த கும்பல் நவீனை கட்டை மற்றும் கம்பியால் தாக்கியதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த நவீனை மீட்டு மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நவீன், சிகிச்சை பலன் இன்றி நேற்று உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நவீனின் குழந்தை மற்றும் அவரது மனைவியை நிலைகுலைய செய்துள்ளது. அவர்களது குடும்பத்தை மட்டுமல்லாது அப்பகுதி மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
