'சிகிச்சையில் இருந்த அனைவரும் டிஸ்சார்ஜ்'... 'புதிய பாதிப்புகள் ஜீரோ'... 'தமிழகத்தில் கொரோனா இல்லாத 'முதல்' மாவட்டம்!!!'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் சமீபமாக கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் குறைந்துவருவது மக்களிடையே பெரும் ஆறுதலை ஏற்படுத்தி வருகிறது.

இதுதொடர்பாக நேற்று வெளியான அறிக்கையில், தமிழகத்தில் மேலும் 1,725 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,59,916 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,495 (நேற்று - 17) ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7,32,656 (நேற்று - 2,384) ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து 15,765 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் மாறியுள்ளது. பெரம்பலூரில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,228 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அத்துடன் நேற்று புதிதாக ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. இதையடுத்து பெரம்பலூர் தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமாக மாறியுள்ளது. பெரம்பலூரில் இதுவரை 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
