'பாப்பா கைய கொடு'... 'ராகுலை பார்த்ததும் ஓடி வந்த சிறுமி'... பிரச்சார கூட்டத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதமிழகத்தில் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு மிக மும்முரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பியுமான ராகுல் காந்தி, கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டு பரப்புரை ஆற்றி வருகிறார். அப்படி அவர் பிரச்சார வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, சிறுமி ஒருவர் அவரைப் பார்த்து ஓடி வந்துள்ளார்.
தன்னை பார்த்து அன்புடன் ஓடி வந்த சிறுமியை பிரச்சார வாகனத்தில் ஏற்றிய ராகுல் காந்தி, அவருடன் புகைப்படத்தை எடுத்துக் கொண்டு நலம் விசாரிக்கவும் செய்தார். ராகுல் காந்தியின் இந்த நெகிழ்ச்சிமிக்க செயலைக் கண்ட அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் மக்கள் உற்சாகத்துடன் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர்.
தன்னைப் பார்த்து அன்பாக ஓடி வந்த சிறுமியை பிரச்சார வாகனத்தில் ஏற்றி அழகு பார்த்த தலைவர் ராகுல் காந்தி!
பொதுமக்கள் உற்சாக ஆர்ப்பரிப்பு!#RahulStandsWithFarmers#VaangaOruKaiPaapom pic.twitter.com/1PoztjaMLG
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) January 25, 2021
இந்த சமயத்தில் சிறுமியுடன் ராகுல் காந்தி எடுத்துக் கொண்ட புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
