'முத்தையா முரளிதரனின்' BIOPIC-ல் 'விஜய்சேதுபதி' நடிக்கும் 'விவகாரம்!'.. 'குஷ்பு' சொன்ன 'கருத்து' இதுதான்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகட்சியின் தேசிய தொடர்பாளர் பொறுப்பு, அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துவிதமான பொறுப்புகளில் இருந்தும் நடிகை குஷ்பு, விலகி அண்மையில் பாஜகவில் இணைந்தார்.

இதனை அடுத்து தொடர்ச்சியாக பத்திரிகையாளர்களின் சந்திப்பில் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லி வருகிறார். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் விவகாரத்தில், “திரைப்பரத்தை திரைப்படமாக பார்க்கவேண்டும்” என குஷ்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசியவர், பதவிக்காகவே சிலர் காங்கிரஸ் கட்சியில் இருப்பதாக குற்றம்சாட்டியதுடன், அவர்கள் தங்களது சொந்த வளர்ச்சிக்காக மட்டுமே பாடுபடுவதாகவும் கடுமையாக சாடியுள்ளார்.
800 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பது குறித்து பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்ப்பது என்பது பல விவகாரங்களை திசை திருப்பும் வகையில் உள்ளது. பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது இதுகுறித்து விமர்சனம் செய்வது தேவையற்றது” என்றார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது இதை தெரிவித்த முத்தரசன், முன்னதாக “முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தாயார் இறப்புக்கு, அமித் ஷா இந்தியில் இரங்கல் வெளியிட்டது அவரது மொழி வெறியை காட்டுக்கிறது” என்று கூறினார்.

மற்ற செய்திகள்
