'ஊழல் குற்றச்சாட்டா'?.. நேருக்கு நேர் விவாதம்... "நான் தயார்... நீங்கள் தயாரா"?.. ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி சவால்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊழல் குறித்து துறை ரீதியாக விவாதிக்க தாம் தயார் என்றும் ஸ்டாலின் தம்முடன் விவாதிக்க தயாரா என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்தார்.
![tn cm eps challenges dmk stalin to open debate on corruption charges tn cm eps challenges dmk stalin to open debate on corruption charges](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/tn-cm-eps-challenges-dmk-stalin-to-open-debate-on-corruption-charges.jpg)
ஈரோடு மாவட்டம் அந்தியூரில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டார்.
ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் தங்களைப் பற்றி ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார் என்றும் அவை அனைத்தும் பொய்யானவை என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து துறை ரீதியாக விவாதிக்க தாம் தயார் என்று கூறிய முதலமைச்சர், தம்முடன் விவாதிக்க ஸ்டாலின் தயாரா என்று சவால் விடுத்தார்.
அதிமுகவை உடைப்பதாக திமுக கூறுகிறது என்றும், ஆனால் திமுகவை உடைக்க மதுரையில் இருந்து ஒருவர் புறப்பட்டுள்ளார் என்றும் கூறிய முதலமைச்சர், உடன் பிறந்த சகோதரருக்கு துரோகம் செய்தவர் ஸ்டாலின் என்று குற்றம்சாட்டினார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)