"டேய்.. நான்தான்டா வெட்கப்படணும்".. ஸ்கூல் பசங்களுக்கு லிஃப்ட் கொடுத்து நெகிழ வைத்த புதுச்சேரி போக்குவரத்து அமைச்சர்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியை சேர்ந்தவர் புதுவை போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா.

Also Read | கர்மா ட்வீட் போட்டு வைரலான முகமது ஷமி.. "நாமளே இப்டி பண்ணலாமா?".. கேள்வி கேட்டு அஃப்ரிடி சொன்ன கருத்து!!
பிரபல முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளான இவர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது குறும்படம் ஒன்றில் ஆசிரியையாக நடித்தபோது பரவலாக பேசப்பட்டார். இதனை தொடர்ந்து திருச்சியில் உள்ள உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு நடனமாடிய வீடியோ வைரலானது.
பின்னர் மகளிர் தினத்தையொட்டி சந்திர பிரியங்கா அம்மனாக தோன்றும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் தற்போது காரில் சென்றுகொண்டிருந்த சந்திர பிரியங்கா, வழியில் பள்ளிக்கு செல்வதற்காக நின்றுகொண்டிருந்த பள்ளிச் சிறுவர்களுக்கு உதவும் வகையில் அவர்களை காரில் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அதன் பின்னர் அவர்களிடம் விளையாட்டாக பேசிக்கொண்டே வரும் அமைச்சர், அவர்களிடம் பேசிக்கொண்டே வீடியோ எடுக்க, அதை பார்த்த அந்த சிறுவர்கள் வெட்கப்பட்டுக்கொண்டே முகத்தை மறைக்க, அதற்கு அமைச்சரோ, “அடப்பாவிகளா.. நான் தாண்டா வெட்கப்படணும்” என்கிறார்.
பள்ளிச்சிறுவர்களுக்கு லிஃப்ட் கொடுத்ததுடன், அவர்களுடன் அமைச்சர் இவ்வளவு இயல்பாக உரையாடியுள்ள இந்த எதார்த்தமான சம்பவம், மிகவும் நெகிழ்ச்சிகரமானதாக குறிப்பிட்டு அமைச்சர் சந்திர பிரியங்காவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மற்ற செய்திகள்
