அடிச்சாச்சு ஆர்டர்.. 9 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்.. குஷியோ குஷியில் புதுவை மாணவர்கள் ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுதுச்சேரி மாநிலத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் நடப்பாண்டில் தேர்ச்சி பெற்றதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

கொரோனா
2020 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் சில மாதங்களுக்கு உள்ளாகவே உலகம் முழுவதும் பரவியது. இதன் காரணமாக உயிரிழப்புகள், வேலை வாய்ப்பின்மை போன்ற பல சிக்கல்களை மனிதகுலம் சந்தித்து வந்தது. கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்ததற்குப் பிறகே கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் கணிசமான அளவில் குறைந்திருக்கின்றன.
கல்வி
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஏற்படுத்திய தாக்கம் அனைத்து துறையிலும் எதிரொலித்திருக்கிறது. முக்கியமாக கல்வித்துறையில் மாணவர்கள் வகுப்பறைகளுக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆன்லைன் மூலமாக மட்டுமே மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இருப்பினும் நேரடி வகுப்புகள் நடைபெறாத காரணத்தினால் தேர்வுக்குரிய பாடங்கள் முழுமையாக முடிக்கப்படவில்லை என கருத்துக்கள் எழுந்தன. இதனடிப்படையில் கடந்த ஆண்டு ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிப்பதாக அரசு அறிவித்திருந்தது.
ஆல் பாஸ்
இந்நிலையில் இந்த ஆண்டும் பல மாதங்களாக ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள் கல்வி கற்று வந்த நிலையில் புதுச்சேரியில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளதாக கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. இந்த உத்தரவு புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, மாணவர்களின் வருகை நாட்கள் குறைவாக இருந்தாலும், பள்ளி கட்டணம் செலுத்தாமல் இருந்தாலும் அவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு மாதங்களாக ஆன்லைன் மூலமாகவே மாணவர்கள் கல்வி கற்று வந்த நிலையில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக புதுச்சேரி கல்வித்துறை அறிவித்திருப்பது மாணவர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
