'வயசு 9 தான், ஆனா கோடியாக கொட்டும் வருமானம்'... 'இந்த ஆண்டின் டாப் YOUTUBER'... வெளியான ஆச்சரிய தகவல்!
முகப்பு > செய்திகள் > உலகம்9 வயது சிறுவன் ஒருவன் ஆண்டுக்கு 200 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறார், என்பது ஆச்சரியமாக இருக்கிறதா, ஆனால் அது தான் உண்மை.

அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை இந்த ஆண்டில் youtube மூலம் அதிகமாகச் சம்பாதித்தவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஆண்டும் அமெரிக்காவைச் சேர்ந்த ரியான் காஜி என்ற 9 வயது சிறுவன் முதலிடம் பிடித்துள்ளார். ரியான்ஸ் வேர்ல்ட் என்ற youtube சேனலை தொடங்கி அதை நடத்தி வரும் அந்த சிறுவன், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களை வாங்கி அதை அன்பாக்ஸ் செய்து அதில் தனக்குப் பிடித்தது மற்றும் பிடிக்காதது குறித்து வீடியோ வாயிலாகக் கூறுவான்.
சிறுவன் ரியான் காஜியின் துரு துரு பேச்சும், அவன் அன்பாக்ஸ் செய்யும் முறையும் பல கோடிக்கணக்கான மக்களை வெகுவாக கவர்ந்தது. இதனால் ரியான்ஸ் வேர்ல்ட் சேனலை இதுவரை 4.17 கோடி பேர் பின்தொடர்ந்து வருகிறார்கள். அந்த சேனலை 1200 கோடி முறை பார்வையாளர்கள் பார்த்துள்ளார்கள். இதன் மூலம் கடந்த ஆண்டு 220 கோடி ரூபாய் அளவிற்கு ரியான் சம்பாதித்துள்ளதாக போர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே youtubeவில் அதிகமாகச் சம்பாதிக்கும் நபராக ரியான் தொடர்ந்து 3 ஆண்டாக முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
