மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்.. ஆசிரியர் ராஜகோபலன் ‘அதிர்ச்சி’ வாக்குமூலம்.. விஸ்வரூபம் எடுக்கும் வழக்கு..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | May 25, 2021 09:58 AM

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதான பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ உட்பட 5 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

PSBB school teacher Rajagopalan arrested under Pocso act

சென்னை கே.கே.நகரில் பத்மா சேஷாத்ரி (PSBB) என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு 12-ம் வகுப்புக்கு வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வரும் ராஜகோபாலன் மீது, மாணவிகள் அடுக்கடுக்கான பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மாணவிகளிடம் ஆபாசமாக பேசியது, தீய நோக்கத்துடன் தொடுதலில் ஈடுபட்டது, ஆன்லைன் வகுப்புகளில் அறைகுறை ஆடை அணிந்து வந்தது என இவர் மீதான பல்வேறு குற்றசாட்டுகள் வைக்கப்பட்டன.

PSBB school teacher Rajagopalan arrested under Pocso act

இதனை அடுத்து மாணவிகளின் வாட்ஸ்அப் எண்ணுக்கு இவர் ஆபாச குறுச்செய்திகள் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஆசிரியர் ராஜகோபாலன் மீது இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவிகள் ஏற்கனவே புகார் அளித்த நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

PSBB school teacher Rajagopalan arrested under Pocso act

இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். இதனை அடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்த நிலையில்,  ஆசிரியர் ராஜகோபாலனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் 5 ஆண்டுகளாக 11, 12-ம் வகுப்பு மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுப்பட்டு வந்ததாக ராஜகோபாலன் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பல ஆசிரியர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

PSBB school teacher Rajagopalan arrested under Pocso act

இந்த நிலையில் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளில் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அடுத்து இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி முகமது பரூக், ஜூன் 8-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்து ஆசிரியர் ராஜகோபலனிடம் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

PSBB school teacher Rajagopalan arrested under Pocso act

மேலும் ஆசிரியர் ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் அளிக்க முன்வரவேண்டும் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. துணை ஆணையர் ஜெயலட்சுமியின் கைபேசி எண்ணான 94447 72222-ஐ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. PSBB school teacher Rajagopalan arrested under Pocso act | Tamil Nadu News.