நான் இப்போ அதிபர்.. உன் பணமும் வேண்டாம்.. பாஸ்போர்ட்டும் வேண்டாம்..- நித்தியின் லேட்டஸ்ட் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல சர்ச்சை சாமியாரும் கண்டெண்ட் வள்ளலுமான பரஹம்ச நித்தியானந்தா தற்போது புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டு அவரது ரசிகர்களை அல்லது பக்தர்களை பரவச நிலையில் ஆழ்த்தியுள்ளார். நித்யானந்தா வீடியோ வெளியிடுவது புதிதல்ல. ஆனால், வீடியோவில் அன்னார் பகிரும் அற்புதக் கருத்துக்களை கேட்க பல்லாயிரம் பேர் காத்திருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

சரி, இந்த வீடியோவில் நித்தியானந்தா பல தக் லைஃப் மொமென்ட்களை அள்ளி வீசியிருக்கிறார். அதில்," உன் துட்ட போட்டு நான் பணக்காரணா ஆகப்போறதும் இல்ல.. நீ ஓட்டுப்போட்டு நான் அதிபரா ஆகப்போறதும் இல்ல.. நானே என்ன அதிபர் -னு சொல்லிக்கிட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசு அவரது பாஸ்போர்ட்டை திரும்பப் பெற்றதாகவும் தனக்கான நாட்டின் பாஸ்போர்ட்டை தற்போது சில நாடுகள் அங்கீகரித்திருப்பதாகவும் நித்தி பெருமையாக குறிப்பிட்டிருக்கிறார்.
நான் நினைத்தால்..
விடியோவில் ஹார்ட் பகுதியே கன்சல்டண்ட் கன்டென்ட் தான். அதாவது தான் இப்போது நினைத்தால் கூட பில்லியன் டாலர்கள் புழங்கும் நிறுவனத்தில் ஆலோசகராக பணியில் சேரமுடியும் எனக் குறிப்பிட்ட நித்யானந்தா, ஆனால் அவற்றை சேவை நோக்கத்துடன் மக்களுக்கு இலவசமாக வழங்கி வருவதாக தெரிவித்திருக்கிறார்.
பிரபஞ்ச உண்மை..
அனைத்து மக்களையும் தாய் போல தான் நேசிப்பதாகவும், அரசு அவரது பாஸ்போர்ட்டை சட்ட விரோதமாக பிடுங்கி வைத்துக்கொண்டதாகவும் நித்யானந்தா அந்த வீடியோவில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பிரபஞ்ச உண்மைகளை சொல்லவே தான் இருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
கைலாசா
இந்திய அரசு நித்யானந்தாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்க, தலைமறைவான அவர் சிறிது காலம் கழித்து இந்துக்களுக்கான தனி நாட்டை உருவாக்கியிருப்பதாகவும் அதன் பெயர் கைலாசா எனவும் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் உள்நாட்டு பாதுகாப்பு, உள்துறை அமைச்சகம், ரிசர்வ் வங்கி, சுகாதாரத் துறை, கல்வித் துறை என பல்வேறு அரசு துறைகள் இருப்பதாகவும் அவர் அறிவித்திருந்தது பல வகைகளில் விவாதப்பொருளானது குறிப்பிடத்தக்கது.
அவ்வப்போது வீடியோவில் தோன்றி தனது பக்தர்களை மட்டுமல்லாது தனது விமர்சகர்களுக்கும் பதிலளித்துவரும் பரமஹம்ச நித்யானந்தாவின் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவருகிறது.

மற்ற செய்திகள்
